ரமதான் கரீம்
ரமதான் நோன்பு தொடங்கிய முதல் நாளில் புதிய சைட் ஒன்றின் வேலைக்கான ஆயத்தங்களை துவங்க நானும் என் இன்ப்ரா டீம் லீடரும் அங்கு தேவைகளை ஆராயச் சென்றோம்.
மதியம் 2 மணிக்கு சென்றபோது அங்கு எல்லாமே திறந்த வெளியில் இருப்பதையும் வேலை செய்பவர்கள் மிகுந்த கடினத்துடன் சூரியனின் கொடூர கரத்தில் ,இங்கு கிட்டத்தட்ட 48 டிகிரி வெப்பநிலை நிலவுவதால் யாராலையுமே தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேலாய் வெயிலில் வேலை செய்ய முடியாது.
11 மணிக்கு முடித்திருக்க வேண்டிய வேலை அவசர நிலையினால் தொடர்வதாய் சொன்னார்கள். எங்கள் விசிட்டை முடித்து வருகையில் என் டீம் லீடர் மயக்க நிலைக்கே வந்திட்டார். கார் நிற்கும் இடம் எங்களுக்கு 1 கிமீ மேலாய் இருந்தது அப்போதுதான் புரிந்தது.
எனக்கும் மயக்கம் இருந்தாலும் தண்ணீர் குடித்தால் போதுமென்ற நிலையில்தான் இருந்தேன். ரமதான் நோன்பு மாதத்தில் பொதுவிடத்தில் நீரோ உணவருந்தவதோ தடை செய்யப்பட்டிருக்கிறது இங்கு.
அவரோ என்னால் முடியலைங்க நான் ஓரமா நின்னுக்கிறேன், காரை இங்கு எடுத்திட்டு வந்திடுங்க, ஏசியில கொஞ்ச நேரம் இருந்தால் நான் சரியாகிப்பேன் என்றார்.
எனக்கு லைசென்ஸ் இல்லை, இங்கு லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டுவது மிகப்பெரிய குற்றம். இருந்தாலும் ஓமனில் பாலைவன ஏரியாக்களில் போலீஸ் கேமராக்களோ, போலீஸ் காரர்களோ இல்லாத இடங்களில் கார் ஓட்டுவேன் திருட்டுத்தனமாக. அதை செய்யலாம் என்றாலும் ஒரு கிமீ போக வேண்டிய கட்டாயம்.
சிறிது தூரத்தில் டைல்ஸ் கண்டய்னெரில் டைல்ஸ் இறக்கிக்கொண்டிருந்தார்கள். பார்த்த உடனே தெரிந்தது பாகிஸ்தானிக்கள் என்று. என்ன செய்வது என்று தெரியாமல் வேகமாய் போய் நிலைமையை சொன்னேன். மூன்று முஸ்லீம்களும் ஓடி வந்து என் டீம் லீடரை கிட்டத்தட்ட தூக்கி வந்து லாரி கேபினட்டில் படுக்க வைத்து ஏசியிலும் விசிறி விட்டார்கள்.
ஒருவர் எங்கிருந்தோ நீர் கொண்டு வந்து அவர் முகம் உடல் எல்லாம் நீரால் நனைத்து தண்ணீரைக்குடிக்கவும் வைத்தார்கள்.
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ரமதானின் முதல் நாள், அவர்கள் வெகு நிச்சயமாய் நோன்பில் இருக்கிறார்கள், ஆனாலும் எவனோ ஒருவனுக்காய் எல்லாவற்றையும் தாண்டி உதவினார்கள்.
கடவுள் எவனாயிருந்தாலும் முதலில் இவர்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி , எந்நிலையிலும் இவர்களின் மனம் மாறாதிருக்க செய்யட்டும்.
# காப்பாற்றப்பட்டவர் டேராடூனைச்சேர்ந்தவர், அவர் சட்டையைக்கழற்றிய போதுதான் நான் பூணூலைப்பார்த்தேன்.
காட்டு மல்லிப் பூத்திருக்க
http://www.raaga.com/player4/?id=155050&mode=100&rand=0.884530427865684
http://www.muziboo.com/gkanchana/music/sen/#
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை கோலோச்சிக்கொண்டிருந்தக்காலக்கட்டமது. 1988 -90 ஆக இருக்கலாம். பனங்குடியிலிருந்து அவர் வருவார். ஒரு பானையும் ஒரு கையை நுழைத்த சட்டையுமாய். ஆயி என்று தான் எல்லோரையும் அழைப்பார். டீ சொல்லு ஆயி என்றபடி டீக்கடையின் வாசலோரம் சம்மணமிட்டு அமர்ந்து எம்ஜிஆர் பாடல்கள் டிஎம் எஸ் குரலில் பாடுவார்.
அடிவயிற்றின் முட்டுக்கொடுத்தப் பானையில் ஒரு கையின் சில்லரைக்காசாலும் மற்றொரு கையாலும் தட்டிப்பாடுவதைக்கேட்க பெரும் கூட்டமே கூடும்.
இந்தப்பாடலையும் செந்தமிழ் தேன்மொழியாள் பாடலையும் நேயர் விருப்பமாக கேட்பவர்களிடம் கறாராக ஐம்பது பைசா கேட்பார். கொடுத்தால் மட்டுமே பாடுவார்.
அடுத்தடுத்த டிவி யுகங்களில் ஒரு டீக்கு கூட வழியில்லாமல் போன அவரை எப்போதோ சித்தாள் வேலைக்குப்போகையில் பார்த்த ஞாபகம் .
காலம் எத்தனை மனிதர்களை மறக்கடித்திருக்கிறது / மூழ்கடித்திருக்கிறது. காட்டு மல்லி பூத்திருக்க இந்தப்பாடலை இணையத்தில் ஏதேச்சையாக தேடிக்கேட்கையில் அடிவயிற்றில் பானையை வைத்து இசையமைத்துப்பாடிய அவரின் முகம் நிழலாடிப்போனது. ஞாபகங்களின் அடுக்குகளில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. நகர்வின் கணங்களில் கண்டுணராத எல்லாமே பதிந்தேயிருக்கிறது எங்கோ அதன் ஒரு மூலையில்..,
கடைசியாய் எனக்குப்பிடித்த மிகப்பிடித்த பாரதியார் பாடல்
பாரதியார்
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா! 4
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா! 5
காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா! 6
கென்
நான் யார் என்பதை , நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை. நான்,நானாகவே இருக்கிறேன் - நம்பிக்கையுடன்..,
Thursday, September 2
Monday, August 2
எனக்குத் திருமணம் ஆகிவிட்டது ..,
நண்பர்களுக்கு வணக்கம்.
எனக்கு கடந்த வாரத்தில் திருமணம் ஆகிவிட்டது . பதிவுத்திருமணம் என்பதால் எவரிடமும் சொல்ல முடியவில்லை. எதையும் திட்டமிடாத வாழ்வில் திருமணமும் அப்படியே நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே .
வாழ்வில் சில தருணங்கள் அற்புதமானவை. சில நட்புகள் நட்புகளாய் பரிமளிக்கிற பொழுதுகள் வாழ்வை இன்னும் உயிர்ப்பாய் வைத்திருக்க உதவுகிறது.
என் அவசர நெருக்கடித் தொல்லையை தாங்கிக்கொண்டு என் திருமண ஏற்பாடுகளை செய்த லஷ்மி - பாலா தம்பதிகளுக்கும், மொத்த நேரமும் கூடவே இருந்து நம்பிக்கைகளை விதைத்த ஜ்யோவ்ராம் சுந்தர்க்கும், ப்ரியனுக்கும் நன்றிகளைத்தவிர்த்து வேறென்ன சொல்ல.
எப்போதும் முன் கோபமும் , முரட்டு பிடிவாதமுமாய் அலைந்த வாழ்வில் இது வேறொரு தருணம். வழக்கமான வேலை நெருக்கடியில் ஒன்றரை நாட்கள் தொலைப்பேசாமல் போகையில் மனைவி குறுஞ்செய்தி அனுப்பினாள் :”
Please remember me , I m ur wife”.,
நட்புகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.
எனக்கு கடந்த வாரத்தில் திருமணம் ஆகிவிட்டது . பதிவுத்திருமணம் என்பதால் எவரிடமும் சொல்ல முடியவில்லை. எதையும் திட்டமிடாத வாழ்வில் திருமணமும் அப்படியே நிகழ்ந்ததில் மகிழ்ச்சியே .
வாழ்வில் சில தருணங்கள் அற்புதமானவை. சில நட்புகள் நட்புகளாய் பரிமளிக்கிற பொழுதுகள் வாழ்வை இன்னும் உயிர்ப்பாய் வைத்திருக்க உதவுகிறது.
என் அவசர நெருக்கடித் தொல்லையை தாங்கிக்கொண்டு என் திருமண ஏற்பாடுகளை செய்த லஷ்மி - பாலா தம்பதிகளுக்கும், மொத்த நேரமும் கூடவே இருந்து நம்பிக்கைகளை விதைத்த ஜ்யோவ்ராம் சுந்தர்க்கும், ப்ரியனுக்கும் நன்றிகளைத்தவிர்த்து வேறென்ன சொல்ல.
எப்போதும் முன் கோபமும் , முரட்டு பிடிவாதமுமாய் அலைந்த வாழ்வில் இது வேறொரு தருணம். வழக்கமான வேலை நெருக்கடியில் ஒன்றரை நாட்கள் தொலைப்பேசாமல் போகையில் மனைவி குறுஞ்செய்தி அனுப்பினாள் :”
Please remember me , I m ur wife”.,
நட்புகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் நன்றிகள்.
Wednesday, July 7
பிறழ்வின் கண்
இலேசான காய்ச்சல், எரிச்சல் மண்டிய பசி, ஏதேனும் உண்ணலாம் என்கிற மனநிலைக்கு வெறும் வெந்நீர் குடித்தால் போதுமென்றும் தோன்றியது. பசித்த நகர ஓட்டமாய் ஓடிய வாகனங்கள் தெருவின் ஓரம் உயிரற்ற உடலாய் கிடக்கின்றன. கிழித்தக் கோட்டில் பிரிந்துக்கிடக்கும் சாலைகளில் மனித நடமாட்டமின்றி , அவ்வப்பொது ஒளிமிகுந்த ஓரிரு கார்கள் போய்க்கொண்டிருக்கின்றன. கார்களின் மேலும் , இடையிலும் ஏறி நிற்கும் பூனைகளின் கண்கள் பளிங்காய் மின்னி மறைகின்றன. இரு புற வானுயர்ந்த கட்டிடங்களின் நடுவில் , சாலையில் ஒரு எறும்பென ஊர்ந்துப்போவது அதுவும் குறையாத வெப்பத்தில், காய்ச்சலின் சூட்டில் நடப்பது மிக ஆயாசத்தையே தருகிறது. நடுவில் கண்ட பூனையின் கண்கள் என்னை என்னுள் ஊடுருவிப் பாயும் கணையாய் ஒளிர்ந்து மறைகிறது.
மனம் ஒரு நகர்வு நதியிலையாய் , மூழ்கியும் சுழலில் சிக்குண்டும், தடுப்புகளில் சிக்கியும் , அமிழ்ந்தும் நகர்ந்தபடியிருக்கிறது. நகர்வது இலையல்ல நதிதான் என்றாலும் தானே நகர்வதான இறுமாப்புகளில் மூழ்கி களிக்கிறதோ. தொடர்பற்ற எண்ணங்களை சிதைத்தபடி காய்ச்சலின் இயலாமை உடலை தளர்ச்சிக்குள்ளாக்கியது. எதுவரையில் நடக்க இயலும் ஏதேனும் பக்கத்தில் உள்ள உணவகமாய் பார்க்கலாம் என்றபடி தேடத்துவங்கினேன்.
கிண்டிப்பாலத்திலிருந்து அடையாறு வரைக்குமான தூரத்தை நள்ளிரவின் உறக்கம் தொலைத்த நேரத்தில் நடந்து கடந்த நாட்களின் கடந்தக்காலத்தை நினைத்துக்கொள்கிறேன்.
இந்நள்ளிரவின் பாலையின் இரவின் வீதியில் பூனைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன. குடல் பிதுங்கி சாலையோடு ஒட்டிக்கிடந்த ஒரு பூனையை நினைத்துக்கொள்கிறேன். நகுலனுக்குப் பூனைப்பிடிக்குமாம். சாருவுக்கு நாய்கள் பிடிக்கும். உனக்கு என்கையில் உன்னை என்றவளை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். யாருக்கு உன்னப்பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எனக்கு உன்னைப்பிடிக்கும் , உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்கிறவளை என்னச்செய்வது என்று யோசித்தபடி சிரித்துக்கொள்கிறேன்.
காலம் ஒரு மழைக்கால சாயங்கால வானவில்லாய் விசித்திர வண்ணங்களை வீசியெறிந்து மின்னி மறைகிறது. தூறலுக்கிடையில் உன் விரல் பற்றி நடக்கையில் , குளிரும் என் உடலுக்காய் உன் ஷாலை எடுத்துப்போட்டாய். நானென்ன பொம்பளையாடி , இதைப்போடுறே என்கையில், என் கொழந்தைக்குளிர்ல நடுங்கிட்டு வரப்போ, நான் என்ன பண்றது. போட்டுக்கோ குட்டி, அடுத்த ஸ்டாப்பில நாம ஸ்வெட்டர் வாங்கிக்கலாம் என்றவள், வாங்கிய இரு ஸ்வெட்டரை அங்கேயே ஒன்றை என்னைப்போடச்செய்ததை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். ஏதேதே பேசியபடி , குளிரும் சாறலுமான பூங்காவின் பூமரத்தோர இருக்கையில் ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்திருந்ததை நினைத்துக்கொண்டேன். நான் கிளம்புறேண்டி என்கையில் , இருடா என்றபடி தான் அணிந்திருந்த ஸ்வெட்டரை கழற்றிக்கொடுத்தாள். ஏண்டி அதான் நான் போட்டுருக்கேன்ல அப்பறமென்ன என்கையில், லூசு என் வாசம் உன் உடம்போட இருக்கட்டும் , குளிரெல்லாம் போயிடும் கழட்டு , சீக்கிரம்டா என்றவளை , வாங்கிக்கொடுத்த திமிர்ல போடுன்னு சொன்ன, இப்போ கழட்ட சொல்ற என்றபடி வீசியெறிந்ததை, கண்கள் தளும்ப ஓடி எடுத்தவள், உனக்கு எப்போவுமே என்னை காதலிக்க வராதுடா என்றாள் .
நள்ளிரவிலும் வெப்பம் குறையாத இங்கு இன்னுமொரு அரை மணி நேர நடையில் தொப்பலாய் வேர்த்தால் காய்ச்சல் குறையலாம் என்று தோன்ற, சாப்பிடும் எண்ணத்தைக்கைவிட்டு நடக்கத்துவங்கினேன். சென்னையிலிருந்து கிளம்புகையில் ஸ்வெட்டரை பெட்டியில் வைக்க இடமில்லாமல் எடுத்து தனியாய் வைத்தது மனதுக்குள் குடையத்துவங்கியது. நீல நிற கோடுகளுடன் , அவளின் வாசம் சுமந்த ஸ்வெட்டர், ஒரு நொடியில் ஓடிப்போய் எடுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட முடியாமல், தானாகவே அறை நோக்கி பிறழ்வின் கணங்கள் தொடரலாம்..,
வகைகள்
புனைவு
Subscribe to:
Posts (Atom)
