நாவல் : அந்தர் முகம்,
தமிழில் : கெளரி கிருபா நந்தன்.
தம் பதியன் ரோஜா, காதெலுனும் தீவினிலே, தளபதி, நிகிதா போன்ற பிற நாவல்களின் மூலம் தமிழ் வாசகர்களுக்கு மிக நன்கு பரிச்சயமான எண்ட மூரியின் இந்த நாவல் ஆழ்மனம் பற்றி வெகு யதார்த்தமாய் பேசுகிறது திரு . கெளரி கிருபாநந்தனின் தமிழ் பெயர்ப்பில்.
மனித சுய நலங்களிலும் , வக்கிரங்களிலும் தனக்குள்ளே ஒடுங்கிப்போன ஒருவன் மெய் அன்பின் மூலம் எத்தகைய அனுபவத்தைப்பெறுகிறான் என்பதை சினிமாத்துறையில் பணியாற்றியதாலோ என்னவோ நாவல் முழுவதும் சிறிது சினிமாத்தனம் தூக்கலாய் வைத்து எண்டமூரி படைத்திருக்கிறார்.
மறு பிறவி , கடவுள் என்று என் மனதுக்கு ஒவ்வாத பின்புலத்தில் நகரும் இந்நாவல் தம் கதாநாயகனின் பாத்திரப்படைப்பால் தனிக்கவனம் பெறும்.
மெல்லிய ஆழ்மன உணர்வுகளை மன நிலையின் இயங்குதல் பொறுத்து வாழ முயலும் , வெளி மனித பார்வையில் பைத்தியக்காரத்தனமான அந்த பாத்திரம் நாவலை உயர்த்திப்பிடிக்கிறது.
சாகித்திய அகாடமி , கோல்டன் நந்தி விருது, தம் முதல் சினிமாவிற்கான ஜனாதிபதி விருதும் பெற்ற எண்ட மூரியின் இந்த அந்தர் முகம் உள் நுழைந்து மனதை ஏதோ செய்கிறது.
அல்லையன்ஸ் பதிப்பு,
விலை : ரூ. 62.00
பக்கங்கள் :279.
1 சொல்லிட்டுப்போனவங்க:
கென், உங்களை 8 போட அழைத்திருக்கிறேன்; விபரங்களுக்கு http://vrkathir.blogspot.com/2007/07/8.html
Post a Comment