நானும் அதுவும்!
கோரைப்பற்களும் தொங்கும் நாக்குமாய்,
கருமை மிருகம் அது.
பளிங்கு நிற கருவிழியில் இயல்பற்ற
பணிவும், நகர்வுகளின் அசைவில்
தனக்குள் ஒடுங்கிக்கொள்வதுமாய் வாசலில்
கூனிக்கிடக்கிறது.
பெற்றவரோ , வளர்த்தவரோ விரட்டியடித்திருக்கலாம்,
ஒன்றுக்கும் உதவாதென்று என்னைப்போல,
வாழ்வின் மேலான ஆசைக்குறையாமல்,
நிராகரிக்கப்பட்ட பின் வாழ்தலின் முயற்சியில்
தெருவில் வீசப்பட்ட நாயின் இயல்பில்தான்,
நானும் அதுவும்...
பலநேரம் வெறிக்கொண்டு , சில நேரம் மெளனித்து.,,,

0 சொல்லிட்டுப்போனவங்க:
Post a Comment