எனக்கு பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து அவளோடு இருக்கிறேன். புத்தம் புதிய ரோஜா இதழ்களின் மூட்டையாய் சிரிக்கிறாள். குவிந்த உதடும் , விழிகளும் அவள் அம்மாவை போலிருக்கின்றன என்கிறது உறவுக்கூட்டம். என் நிறத்தில் இல்லை என்பதில் மிகுந்த சந்தோசம் என்கிறாள் மனைவி.
என் மகளை தூக்கி சுமக்கையில் மார்பில் ஊறும் கனிவுக்கு என்ன பேர் என்றே தெரியவில்லை. வாடிய பூவாய் இருக்கும் மனைவியின் முகத்தில் தெரியும் அந்த அழகுக்கு தாய்மை என்பதை விட பொருத்தமானதாய் ஏதேனும் பெயர் இருக்கலாம். அவள் கண்கள் என்னிடம் பேசுகையில் என்னால் தூரத்தே நின்று உடம்பு எப்படி இருக்கிறது என்று ஒப்புக்காய் தலையாட்ட முடியவில்லை.
தூக்கி எடுத்து நெற்றியில் முத்தமிட்டு, உடம்பெல்லாம் முத்தங்களால் ஆறுதல் சொல்ல துடித்துக்கொண்டிருக்கிறேன். எல்லா உறவுகளின் கூட்டமும் குறுக்கும் மறுக்குமாய் தொல்லையேற்றியபடி இருக்கிறார்கள்.
தகப்பனாகி விட்டேன் என்பதில் எனக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்கிறது., காதலும், காமமுமான என் வாழ்வின் ஆதாரம், என் வித்து என்பதில் மனசுக்குள் இறக்கை முளைத்து சிறகடித்திருக்கிறது. நர்சுகள் , ஆயாக்கள் என்று காண்கிறவர்களிடமெல்லாம் பணத்தை வாரியிறைத்தபடி இருந்தேன். மாமனார்க்கு இன்னும் என் மேலான கோபம் தீராமலிருந்திருக்கலாம். முகம் சுளித்தபடி என் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தார்.
பொண்ணு பெத்திட்டேடி இன்னுமாச்சும் ஏதாச்சும் சேத்து வைக்க சொல்லு உன் வீட்டுக்காரர..,
பொத்தகம் , எலக்கியம்னு இருந்தா வர மாப்பிளை , உங்க பக்கம் கூட தலை வச்சி படுக்க மாட்டான் என்கிற அறிவுரைகள் என் காதில் விழ வேண்டும் என்பதற்காய் என் மனைவியிடம் கூறப்பட்டுக்கொண்டிருந்தன.
எல்லோரையும் விரட்டி விடலாம் என்றிருக்கிறது, என் மனைவி என் தவிப்பை உணர்ந்தவளாய், அருகில் அழைத்தாள்.
இன்னும் மூணு நாளைக்கு பொறுத்துக்கோடா.., நம்ம வீட்டுக்கு போயிடலாம் தங்கம் என்றாள். என் குழந்தை , என் செல்லக்குழந்தை , அடம்பிடிக்கிற குழந்தைக்கு இன்னொரு குழந்தை. சிரித்தபடி இருந்தேன். தலையில் செல்லமாய் கோதி நிற்கையில்
டாக்டரம்மா உள் வந்தாள், என்ன சார் வொய்ப் விட்டு போக மனசு வரலையா? இன்னொரு ரூம் புக் பண்ணிக்கோங்க, ஒரு ரூம் முழுக்க உங்க ஆளுங்களா இருக்காங்க..,
ஹாஸ்ப்பிட்டல் ரூல்ஸ் பாலோ பண்ணுங்க என்கிறாள்.
ஓகே மேடம் பணம் கட்டிடுறேன் என்கிறேன்.
இன்னும் எத்தனை நாளைக்கு மேடம் ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கனும் ? நான் எப்போ கூப்பிட்டு போகலாம் என்கையில் ..,
ஸ்ஸ் என்ன சார் இவ்ளோ அவசரப்படுறீங்க? உங்க வொய்ப் உடம்பு பாருங்க., எவ்ளோ சிக்கலான பிரசவம் இது. இன்னும் ஒரு வாரமாவது அவங்க இங்கே இருக்கனும் என்கிறாள்.
என் மாமனார் உள் வந்தார்., என் மனைவியிடம் நாம் நம்ம வீட்டுக்குப் போயிடலாம், உன்னால சமைக்க எல்லாம் முடியாது இப்போதைக்கு. இன்னும் ரெண்டு, மூனு மாசத்துக்காச்சும் நம்ம வீட்டோட இருந்து , நல்லா சாப்பிட்டாதான் நீ உடம்பு தேறி வருவ. பொண்ணு பெத்திருக்கேடி, அம்மா இல்லாதவ நீ.., கொழந்தையும் இவ்ளோ வீக்கா இருக்கா பாரு என்றார்.
என் ஏக்கம் என் மனைவிக்கு மிக நன்றாய்த் தெரியும் என்பதால் , நான் இல்லப்பா நான் பாத்துக்கிறேன் , அவர் என்னை நல்லா பாத்துப்பார் என்கிற பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி ஓகே டாடி , டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணுங்க என்னைக்கு வீட்டுக்குப் போகலாம்னு , நாம போகலாம் என்றாள்.
மாமனார் வெற்றிப் புன்னகையுடன் , என்னைக்கேவலமாக பார்த்தபடி வெளியேறினார்.
என் புன்னகை முழுக்க வடிந்திருந்தது, இருந்தும் அதை வெளிக்க்காட்டி கொள்ளாமல் சிரித்தபடி ,
குட்டி உடம்ப பாத்துக்கோடி., பாப்பாவை நான் தினமும் வந்து பாக்கலாம்தானே என்றேன்.
அவளுக்கு புரிந்திருக்க வேண்டும் என் முகம் நோக்காமல், சே என்னடா நீ , எவ்ளோ நாளைக்கு அப்பறமா என் டாடி வீட்டுக்கு கூப்பிடுறார், அதும் இல்லாம எனக்கு கொழந்தைய எப்படி தூக்கனும் , பாத்துக்கனும்னு கூட தெரியாதுடா என்றாள்.
வாய் வரை வந்திட்ட வார்த்தைகளை சொல்லிவிட்டேன் என் அம்மா வரேன்னு சொன்னாங்கடி என்று
ஓ சரிடா வந்த உடனே எங்க வீட்டில கூப்பிட்டு வந்து விடு, நான் சூப்பரா பாத்துக்கிறேன் என்றாள்.
ஒரு நிமிடம் என் அம்மாவின் கோபம் வந்து போனது , கொண்டான் கொடுத்தான் வீட்டுல போயி உக்கார்ந்து திங்க நான் ஒன்னும் சோத்துக்கு இல்லாதவ இல்லடா.
கல்யாணம் தான் முறைப்படி ஆகல, பிள்ளைப்பேறு , பேத்தின்னு நான் பக்கத்துல இருந்து பாத்துக்கனும்னுதான் இம்மாம் தொலவு வரேன்னு சொன்னேன் என்பாள்.
ஏதும் சொல்ல முடியாமல் சரிடி என்றேன். மீண்டும் உள் நுழைந்த மாமனார், வெற்றி பெருமிதத்துடன், பேசிட்டேண்டி, இன்னைக்கு சாயந்திரமே போகலாமாம், நம்ம வீட்டுக்கு பக்கத்தில அவங்க கிளினிக் ஒன்னு இருக்காம், அவங்களே நர்சு அனுப்பி டெய்லி இஞ்செக்ஸன் எல்லாம் போட்டுறாங்களாம்டி. என்ன எல்லாத்துக்கும் பணம்தான் வேனும் என்றார்.
அவருக்கு என் மேலான ஆத்திரத்தைத் தணிக்க மிக நல்ல சந்தர்ப்பம் இதுதான். தான் எவ்வளவோ தடுத்தும் தன்னை தூக்கி எறிந்து மகள் திருமணம் செய்து கொண்டவன், எந்த விதத்திலும் தனக்கு சமமானவனாயில்லாது போனதும், உறவுக்காரர்களின் கேவலப்பேச்சுகளும் அவரை இந்த நிலைக்கு பழி வாங்கிட தள்ளியிருக்கிறது.
நான் மெதுவாய் நின்று கொண்டிருந்தேன், அந்த அறையில் நான் இருப்பதற்கான நிகழ்வே இல்லாதவாறு அவர் பேசிக்கொண்டிருந்தார்., என் மனைவியின் முகத்தில் தவிப்பும் , இரக்கமும் மாறி மாறி வந்தபடி இருந்தது.
மிகத்தெளிவாக புரிந்தது., மகளைப்பிரிந்த நாட்களின் கதைகளை அவர் சுவாரசியமாக அல்லது என்னை விலக்கி பேச்சில் அவளை மட்டும் பங்கு கொள்ள வைக்க என பல யுக்திகளுடன் பேச்சை வளர்த்துக்கொண்டிருந்தார்.
வெகு நேரமாய் நின்றுக்கொண்டிருந்தேன், நான் இருப்பதை அவர் ஒரு பொருட்டாகவே யோசித்ததாய் தெரியவில்லை. மெதுவாய் என் மனைவி அழைத்தாள்..,
அதான் டாடி வந்திட்டார்லடா., அவர் பார்த்துப்பார், நீ கொஞ்சம் நம்ம பிளாட்டுக்கு போயிட்டு,
என் ட்ரெஸ் கொஞ்சம் உன்னோட பெரிய பேக்ல வச்சி எடுத்திட்டு வந்து கொடுத்திட்டு போடா என்றாள்.
ஒரு தலையாட்டலும் சிரிப்புமாய் நகர்ந்தேன். வேறேதும் செய்ய மனமில்லாது போயிற்று.
செல்போனின் ஓசை கவனம் கலைத்தது, வரிசையாய் வாழ்த்து செய்திகள், அழைப்புகள், பார்ட்டி கேள்விகள்., நான் மிக மெதுவாய் தொலைந்துக்கொண்டிருந்தேன்.
என் மகள் மாமனாரை துரத்தி விட்டு வந்தமர்ந்துக் கொண்டாள். மீண்டும் தரையில் கால்படாமல் , வானம் இடித்து நடக்கத்துவங்கினேன். என் பெண், என் உயிர்..,
மகிழ்ச்சியை இன்னதென்று வெளிக்காட்ட இயலவில்லை.., பார்க்கிங்கில் பைக் எடுக்கையில் சார் பார்க்கிங்க் 5 ரூ தராம போயிட்ட சார் என்றவனை திரும்பி பார்த்தேன்.
சாரிப்பா வொய்ப்க்கு பிரசவம்பா அதான் அவசரத்துல போயிட்டேன் என்றேன்,
பரவால்ல சார் , கொழந்தை பொறந்தாச்சா சார் என்றான், ஆமாம்பா பொண்ணு பொறந்திருக்கா என்றேன்..
என் முகம்கொள்ளா சிரிப்பு அவனையும் தொற்றிக்கொள்ள வேண்டும் , பொண்ணுதான் சார் மகாலெச்சுமி, வூடு நிறைஞ்சி போவும் சார் என்றபடி சார் டீக்கு எதுனா கொடு சார் என்றான்.
20 ரூ தாளை நீட்டியபடி வண்டியை நகர்த்தினேன்.
மிக மெலிதாய் கண் திறந்தேன், பின் மண்டை உடைந்திருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாமல் ரத்தம் வழிந்திருந்தது முதுகிலெல்லாம்.,
பற்கள் குத்தி உதடு கிழிந்திருந்தது உணர முடிகிறது, பைக் எதில் மோதியது என்றுதான் தெரியவில்லை.
பக்கத்தில் கூடிய கூட்டத்தின் வாயிலாய் ஷேர் ஆட்டோ சார் , பின்னாடி வந்த ஸ்பீடுக்கு தட்டிட்டான் சார், அப்படியே பறந்து போயி போஸ்ட்ல அடிச்சி விழுந்தார் சார் என்கிற விவரணைகள்
கென்னு நீ இருவது வருசம் பின்னாடி இருக்கேடா.., லவ் பண்டேறுன்னு சொன்னா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிக்கிறது என்னடா மெண்டாலிட்டி.
நான் உனக்காக இருக்கேன் just be there for u இதுல என்னடா கஷ்டம் உனக்கு , விட்டுட்டு போறேன்னா சொன்னேன், இல்லை உன்னை ஏமாத்திட்டு போயிட்டேனா? ஏற்கனவே லவ் பெயிலியர் தானேடா நீ., என்னமோ புதுசா தோத்துப்போயிட்ட மாதிரி பீல் பண்ற.
ஒரு பொண்ணு இல்லாட்டி வாழ்க்கையே இல்லன்னு சொல்றதெல்லாம் சுத்த ஹம்பக், கர்நாடகம்டா, மூஞ்சியக்கழுவிட்டு போயிட்டே இரு. எல்லாம் கடந்து போகும். என்னோட இருந்த சந்தோச நாட்களை ஞாபகம் வச்சிக்கோ ., இப்பவும் நான் உன்னை லவ் பண்டேறாண்டா. லவ் மட்டும்தான் பண்றேன் என்றவள் நினைவுக்கு மிக மெலிதாய் வந்தாள்.
எனக்கு இன்னம் உயிர் போகவில்லை என்பது புரிந்து வலி மரத்துப்போய் விட்டிருந்தது.
38 சொல்லிட்டுப்போனவங்க:
நெசமோ புனைவோ எதுக்கும் இருக்கட்டுமுன்னு வாழ்த்து(க்)களைச் சொல்லிக்கறேன்:-)
வாழ்த்துகளுக்கு நன்றிங்க முழுசா படிக்காம சொல்றீங்கன்னு நினைக்கிறேன், படிச்சிட்டு சொல்லுங்க
படிச்சதாலேதான் சொன்னேன். காதலிக்கிறேன்னு பொண்ணு சொன்னதும் கற்பனையில் குடும்பம் நடத்திக் குழந்தையும் பெத்துக்கிட்டீர். இது மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் ஊர்வசி சொல்லும் வசனத்தை ஞாபகப்படுத்துச்சு:-))))
எப்படியும் ஒரு நாள் கல்யாணம் ஆகத்தான் போகுது. அப்புறம் குழந்தை.
அதுக்குத்தான் அட்வான்ஸா வாழ்த்துகளை அனுப்புனேன்:-))))
அடக்கொடுமையே என்னங்க நீங்க?
"காதலிக்கிறேன்னு பொண்ணு சொன்னதும் "
தயவு செஞ்சி இன்னொரு முறை படிங்க :)
சொல்லவிட்டுப்போச்சு. விபத்தில் இருந்து மீண்டுவந்துருவீங்க.
விபத்துன்னா மீண்டு வந்திடலாம்தாங்க., இந்த மூஞ்சியக்கழுவுற தத்துவம் எனக்கு அவ்வளவா சரிப்படல.
பாக்கலாம் நன்றிங்க
//என் நிறத்தில் இல்லை என்பதில் மிகுந்த சந்தோசம் என்கிறாள் மனைவி.//
:-))))
//தூக்கி எடுத்து நெற்றியில் முத்தமிட்டு, உடம்பெல்லாம் முத்தங்களால் ஆறுதல் சொல்ல துடித்துக்கொண்டிருக்கிறேன். எல்லா உறவுகளின் கூட்டமும் குறுக்கும் மறுக்குமாய் தொல்லையேற்றியபடி இருக்கிறார்கள்//
கலக்கல்
//அவர் என்னை நல்லா பாத்துப்பார் என்கிற பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்//
டச் பண்ணிட்டீங்க
//மாமனார் வெற்றிப் புன்னகையுடன் , என்னைக்கேவலமாக பார்த்தபடி வெளியேறினார்//
அசத்துறீங்க
//அந்த அறையில் நான் இருப்பதற்கான நிகழ்வே இல்லாதவாறு அவர் பேசிக்கொண்டிருந்தார்., என் மனைவியின் முகத்தில் தவிப்பும் , இரக்கமும் மாறி மாறி வந்தபடி இருந்தது//
அருமையா விவரிக்கறீங்க
//எனக்கு இன்னம் உயிர் போகவில்லை என்பது புரிந்து வலி மரத்துப்போய் விட்டிருந்தது//
சூப்பரா இருக்குங்க
நன்றிங்க கிரி :)
வாழ்த்துக்கள்.
முதல் குழந்தையா?
நன்றிங்க ராம்
ஆனா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. முழுசா படிக்காம வாழ்த்து சொல்றிங்க :)
சாதாரண பத்திரிகைக் கதைபோல் அந்த மருத்துவமனை விவரணைகள் இருந்தாலும்... முடிவு!!
எனக்கு இந்தக் கதையும் பிடிச்சிருக்கு கென்.
நன்றிங்க சுந்தர்
கென்.. இது கற்பனையோ, நிஜமோ.. சமீப காலங்களில் நான் படித்ததில், என்னை மிகவும் பாதித்த எழுத்து இதுதான்.. மருத்துவனைக் காட்சி விவரிப்பில் பயங்கரமான முதிர்ச்சி தெரியுது.. அற்புதம்..
//
மகளைப்பிரிந்த நாட்களின் கதைகளை அவர் சுவாரசியமாக அல்லது என்னை விலக்கி பேச்சில் அவளை மட்டும் பங்கு கொள்ள வைக்க என பல யுக்திகளுடன் பேச்சை வளர்த்துக்கொண்டிருந்தார்.
//
அவ்வளவு அருமையா ஒரே வரியில் சொல்லியிருக்கீங்க..!
நன்றிங்க பாலமுருகன்
வாழ்த்து சொல்லலாம்னுதான் ஒபன் செஞ்சேன்
ஆனா வார்த்தையே வரலைங்க
முழுக் கதையும் படிச்ச பின்பு
இது கதை தானுங்களே
உணர்ச்சிகளை வார்த்தைகளால் சிதையாமல் வடிக்கும் அசாதாரணமான ஆளா இருப்பிங்க போல!
வாசித்த எழுத்துக்களில் மிகவும் ஒன்றியது உங்களுடையதும் ஒன்று.
பதிவுக்கு மிக நன்றி.
கதை இல்லைங்க :)
நன்றிங்க
உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடிக்கலேன்னா வேற மாதிரி ஆகிடேறேன், இதை எழுத கூடாதுன்னு நினைச்சேன், இதை மட்டும் இல்ல கடைசி 5 போஸ்ட் நன்றிங்க
என்னமோ செய்யுது
அந்த எழுத்துக்கள்
முக்கியமாய் அம்மா, ஆஸ்பத்திரி, மற்றும் மாமனார்.
நன்றிங்க அமிர்தவர்ஷிணி
அருமையாக இருக்கின்றது நண்பரே. முக்கியமாக கதையின் முதல் பாகம். கடைசி பாகம்தான் புரியாமல் குளப்புது. எதுக்கும் ஒரு தடவ மீண்டும் படித்துட்டு வாரேன். :-)
நன்றிங்க மைபிரண்ட்
கொழப்புதா ?
நன்றிங்க மைபிரண்ட்
கொழப்புதா ?
ஆமாங்க. first halfக்கும் second halfக்கும் என்ன லின்குன்னு புரியல.. first half-ஓட நிற்த்திருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்குமோன்னு தோணுது. :-)
ஆஹா என்னங்க நீங்க மைபிரண்ட்
second half தான் கதையே அதை சொல்லத்தான் first half நீங்க இப்படி சொல்றது நியாயமா ?
அடடா.. ஆனால் எனக்கென்னமோ first halfதான் பிடிச்சிருக்கு. பிடிச்சிருக்குன்னு சொல்றதை விட ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாலும் அது மிகையாகாது. இயல்பா நடந்த மாதிரியே எழுதியிருந்தீங்க பாருங்க. அங்கேதான் நிக்குறீங்க நீங்க. :-)
second half இன்னும் எனக்கு புரியல. :-S
first half ஒரு மாதிரி ஜனரஞ்சக நடையில எழுதி இருக்கேன். அது முழுக்க கனவுதான்னு தெரிஞ்சிதாங்க
second half தான் நிஜம் :) நன்றிங்க
மைபிரண்ட்
ம்ம்.. திரும்ப படிச்சுட்டு வந்துட்டேன். இப்போ புரியுது. நன்றி நண்பா. :-)
(ஆனா, தலைப்ப மட்டும் மக்கள்ஸ் பார்த்துட்டு வாழ்த்து மேல வாழ்த்து சொல்ல வருவாங்க.. ரெடியாகிக்குங்க. ;-))
அந்தக்கொடுமையும் காலையில நடந்திச்சு. :)
நன்றிங்க மைபிரண்ட்
நல்லா இருக்கு கென்..
அட.. அந்த பொண்ண பத்தி ரெண்டு கவிதை எழுதிட்டு, டாஸ்மாக் போய் குடிச்சிட்டு, அப்படியே அந்த பொண்ண கொலையும் பண்ணிட்டு, முகம் கழிவிட்டு, வேற வேலைய பார்க்கறதுக்கு பதிலா...
//கென்னு நீ இருவது வருசம் பின்னாடி இருக்கேடா.., லவ் பண்டேறுன்னு சொன்னா கல்யாணம் பண்ணிக்கனும்னு யோசிக்கிறது என்னடா மெண்டாலிட்டி.//
//ஏற்கனவே லவ் பெயிலியர் தானேடா நீ., என்னமோ புதுசா தோத்துப்போயிட்ட மாதிரி பீல் பண்ற.//
//உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடிக்கலேன்னா வேற மாதிரி ஆகிடேறேன், இதை எழுத கூடாதுன்னு நினைச்சேன், இதை மட்டும் இல்ல கடைசி 5 போஸ்ட்//
மறுபடியும் டாஸ்மாக் தான் சரி..
:)
கென்,
ரொம்பக் கொடுமைப்படுத்திட்டேனா?
பிராயச்சித்தமா இன்னும் 5 முறை படிக்கவா?
இல்லைங்க துளசி உங்களுக்கு புரியற மாதிரி எழுதலன்னு நினைக்கிறேன்.
பிராயச்சித்தமா வேற புரியற மாதிரியான கதை எழுத முயற்சிக்கிறேன்
"எனக்கு இன்னம் உயிர் போகவில்லை என்பது புரிந்து வலி மரத்துப்போய் விட்டிருந்தது."..
வலி மறந்தோ மரத்தோ போன மாதிரி தெரியலயே...
நல்ல புனைவு (புனைவுதானே..??) வாழ்த்துக்கள்.
(கடைசி 5 பதிவுகளுக்கும் சேர்த்து)
'பெண்ணுக்கு ஆண் விளையாட்டுப்பொருள்,
ஆணுக்குப் பெண் போகப்பொருள்'
அப்படிங்கிறீங்க! நல்லா எழுதியிருக்கீங்க!
உங்கள் 'உயிரை'விட மேலான அன்பை மகளிடம் செலுத்துங்கள்
வாழ்த்துக்கள்!
நன்றி கிருத்திகா
நன்றிங்க சுந்தரேஸ்வரன்
Hi Ken,
I could very much relate with all the natural reactions of a ' seperation'. Izhappin vedhani mattum puriya vendumaanal izhanthu paarkka vendum. Kandippa i agree with you priyan.
Such an outstanding writing, enakku nambikkai irukku... Everything will be all right. Coz a relatioship is just slipped away from our lips, not the love..
Post a Comment