Tuesday, October 14

அதீதனும் பிக்னிக் பாரும் பின்னே நானும்





நானும் அதீதனும் இணையம் வழியே நண்பர்கள், நண்பர் வளர்மதியும் ( வினையான தொகை) , பைத்தியக்காரனும் அப்படிதான் நட்பானார்கள். எப்போதும் புனைவுகள் ,கவிதைகள் குறித்த தெளிவான சுயமான முடிவை முன் வைப்பார் அதீதன். தெரிந்தவர் என்பதற்காகவோ , நண்பர் என்பதற்காகவோ எந்த விட்டுக்கொடுத்தலும் இருக்காது.

இங்கேதான் வாசிக்கிறவர் கூர்ந்துக் கவனிக்கனும், என்ன பாத்தீட்டீங்களா?
நாங்க பிக்ஸன் ஆசாமிங்க, எது நடந்தாலும் நல்லா, நயமா பொய்யை புகுத்தி , கட்டிங்க் அதோட சோடா இல்லாட்டி பிளயின் வாட்டர் இல்லாட்டி கோக் இல்லாட்டி வெறுமனே அட எப்படியோ ராவாவாது அடிக்கிற ஆசாமிங்க.

இங்கதான் வளர்மதி வரார் , அவர் யாருன்னா பைத்தியக்காரனோட கொஞ்சம் வயசுல மூத்தவர் என்னது யூத்தா ? அடடா இது வேறையா ? அப்படி எல்லாம் நம்பிடக்கூடாது. அவரெல்லாம் நிறப்பிரிகைக் காலத்தில ( சிறுகுறிப்பு: நிறப்பிரிகை பத்திரிக்கை பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் ஒரு ஆய்வுக்கட்டுரையாக வெளிவர இருப்பதால் இப்போதைக்கு யோசிச்சிட்டே இருங்க)

அப்படின்னா வளர்மதி தோழரா? ஆமாம்னு சொன்னா வளர் கோவிச்சுப்பார், இல்லைன்னு சொன்னாலும் அவர்தான் கோவிச்சுப்பார்.

இங்கதான் இந்த புனைவுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருத்தர அறிமுகப்படுத்துறோம், அவர் யாருன்னா பார்ல வேலை செய்றவர்,

சார் ஆர்டர் சொல்லுங்க என்கையில்

அதீதன் ஆரம்பிக்கிறார் ஒரு லார்ஜ் ஓல்ட் மங்க வித் கோக், அவருக்கு ஒரு லார்ஜ் ஓல்ட் காஸ்க் வித் பிளயின் வாட்டர், அவருக்கு ஏதாச்சும் குடிக்க தில் மாங்கே மோர் கொண்டு வாங்க என்றபடி

ஆமாம் உங்க காதல் கதை சொல்லுங்க என்கிறார். இன்னும் சிறிது நேரத்திற்கு அப்பால் என்ன நிகழும் என்பது எனக்கு மிக நிச்சயமாய் தெரிந்திருந்தது.

இந்த இடத்தில் என்னோட அறிவு ஜீவித்தனம் காட்ட நான் என்ன சொல்லப்போறேன்னா

" நாவல் என்பது, உள்ளுமை பற்றிய ஒருவித-மொழிரீதியான, மொழியான தற்காலக் கண்டுபிடிப்பு எனலாம். இந்தக் கண்டுபிடிப்பு என்பது இல்லாவிட்டால், நாவல் என்பது சாத்தியமாகாது.

இப்படித்தான் திணை இசை சமீக்ஞையில் நாகர்ஜீனன் சொல்லி இருக்கார் "


இப்படி ஏதாச்சும் இடையில் இடையில சொல்லனும் இல்லாட்டி தாஸ்தயேவ்ஸ்கி கோவிச்சுப்பார் அவர் யாருன்னு கேட்கிறீங்களா? அடப்பாவிகளா அப்போ குற்றமும் தண்டனையும் படிச்சதேயில்லையா?
பார்த்ததே இல்லையா?

இந்த இலக்கியம் , இலக்கியம்னு சொல்றாங்களே அப்படின்னா என்னன்னு யாராவது கேட்டு இருக்கீங்களா?

நவீனம், பின் நவீனம், இருத்தலியத்தல், கட்டுடைத்தல், பிளேடு போடுதல்ன்னு ஏதாவது தெரியுமா?

ஒரு டாஸ்மாக் கடையிலேயும் பீர் கூலிங்கா இருக்கிறதில்லை தெரியுமா? காந்தி பொறந்த நாளுன்னு பிளாக்ல சரக்கு வாங்கினதுல , சைடு டிஸ் வாங்க காசு இல்லாம வயிறு எரிய, எரிய குடிச்சப்போ, அந்த ஆளு பொறந்தே இருக்க வேணாம்னு சொன்னப்போ, அடப்பாவி அந்த ஆளு பொறக்கலேன்னா எப்படிடா இன்னைக்கு லீவு கெடச்சி இருக்கும்னு பொலம்பி கண்ணீர் விட்டவன் இந்த கதைக்கு சம்பந்தமில்லாதவன் என்பதால்

வாசகா ,இதை நீ மனதில் இருத்திக்கொள்ள தேவையில்லை.

மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.


நிறைய நாட்களாய் எனக்கு இருக்கும் சங்கடம் கர்த்தர் நன்மை இன்னதென்று சொல்லிய பிறகும், எங்க அப்பா எதுக்கு என்னைத் திட்டிட்டே இருக்கார்னுதான். புனைவுல சொந்தக் கதைய பேசுறது புனைவை வளர்க்கிறதுக்கான ஒரு வழியே தவிர வேறேதும் இல்லை. இதை எல்லாம் வாசகா நீ கண்டுக்கப்படாது.

ஒரு நாளாவது கவிதை , நாவல்னு யோசிக்காம இருக்க முடியுதான்னா முடியல. வாசிப்பு, வாசிப்பு தேடல், சரக்குன்னு கும்மாளம் போடற மனசுக்கு என்னமோ ஒரு ஈகோ , பாரு நானும் படிச்சிருக்கேன், எனக்கும் தெரியும்னு சொல்லிக்கிறதுல ஒரு சந்தோசம் அவ்ளோதான்.

யாரைப்பற்றி எனக்கென்ன கவலை
என்னைப் பற்றியும் இல்லை
கவலை
ஏனெனில் நானே எனக்கு
யாரோ


இப்படி சொன்ன அறிஞர் எங்க இருந்திருப்பான், சொந்த வீட்டுக்கு ஜாமீன்ல போயிருப்பானா? என்னைக்காச்சும் சுய கழிவிரக்கத்தில யோசிச்சு பார்த்திருப்பானா?

உன்னால எனக்கு என்ன use ? use இல்லன்னு முடிவு பண்ணின உடனே விட்டுட்டு போயிட்டேன்னு பதில் கேட்டு திகைச்சுப் போயி நின்னிருப்பானா?

மொத்தமா சென்னை பிராஞ்ச் மூடப்போறாங்க, எல்லாரும் லேஆஃப்ல காலின்னு ஒரு கட்டத்தைப்பத்தி எல்லாம் யோசிச்சு இருப்பானா?

கதை சொல்லிக்கு இடையில் நிறைய குளறுபடி இருப்பதால மறந்திடுறார் , கதையாடலை எப்படி கொண்டு செல்வது என்பதில் நிறைய குழப்பம் நிலவுவதால் ஏதோ யோசிச்சு, வேற எதையோ சொல்ல ஆரம்பித்திடுவதால் கண்டியூனிட்டின்னு சொல்றது இல்லாம போயிடுது. ஆனா வாசகா இதையெல்லாம் யோசிக்கக் கூட முடியாம போகுது .


இங்கதான் ஒரு சிக்கல் இதுவரைக்கும் நாலு லார்ஜ் ஆகிவிட்ட நிலையில் என் காதல் கதை முக்கியக் கட்டத்தை அடைந்திருந்தது ஆனாலும் நான் - பிக்ஸன் பார்ட்டியான தோழர் சரி தோழர்ன்னு சொன்னா கோவிச்சிப்பார் வளர்மதி அதென்ன கென், அந்த பொண்ணு ஒத்துக்கலயா ? என்றார்.

அதீதன் வெகு கவனத்தோடு , அந்த பொண்ணுக்கு உங்க மேல கருணைங்க , அதை காதல்னு கொழப்பிக்கிட்டா.., இங்கதான் நீங்க தப்பு பண்ணிடக்கூடாது.

காதல்னா என்ன ? ஒருத்தர் நல்லா இருக்கனும்னு யோசிக்கிறது அப்போ நீங்க என்ன பண்ணனும் , அவளை நல்லா பாத்துக்கனும்.., தோழமையா இருக்கனும் ., எல்லாம் கடந்தும் அவ உங்களை பாத்துக்கிறான்னா அவளை நீங்க தொந்தரவு பண்ணிடக்கூடாதுன்னு சொன்னார்.

இப்படிதான் பாருங்க நான் ----------------- இங்கு அதீதனைப்பற்றி சொல்ல வந்த அனைத்தும் முன்னமே கதைகளாக தமிழ் மண திரட்டி படி ******* ஆக வந்திட்டதால் அதைப்பற்றி பேசுவது கதையாடலை நீட்டிச் செல்லும் ஒரு வழியே தவிர வேறல்ல. எனவே அதைப்பற்றி இங்கே எதுவும் சொல்லப்படமாட்டாது.

இப்போது ஆளுக்கு ஐந்து லார்ஜ் ஆகிவிட்ட படியால் இப்போதும் அதீதன் வெகுத்தெளிவாக

"வளர் நீங்க எல்லாம் நான் பிக்ஸன் ஆசாமிங்க.., எங்களை மாதிரி ஒரு கதை எழுதுங்க"

என்று சவால் விட்டபடி பாயில்டு ஐட்டமாக வந்த சைட் டிஸ்களை காலி செய்துக்கொண்டிருந்தார்.

வளரோ அதான் கவிதை எழுதி இருக்கிறேனே என்க, அதெல்லாம் ஒத்துக்க மாட்டேன், நீங்க தத்துவார்த்த ரீதியில் கவிதை எழுதி இருக்கீங்க, கவிதைக்கான அழகியல் இல்லை அதில் என்றார்.

வளர்மதி எழுதிய நாடகம் அவரிடம் இருந்து அவருக்கே தெரியாமல் திருடப்பட்டு , பல்கலைக்கழக பாடமாக வைக்கப்பட்டிருந்ததும் , இப்போது தான் தோழர்கள் 2 சதவீத செக்கை தந்திருப்பதும் இங்கே கட்டாயமாக சொல்லப்படவேண்டிய உண்மை.

இன்னும் இரண்டு நாடகங்களை அவர் வெளியிடாமல் வைத்திருப்பதற்கு மிக முக்கிய காரணம் மேற்சொன்ன திருட்டுதான் என்பதிலிருந்து இலக்கிய சூழல் எத்தகைய அறிவு திருட்டுத்தனத்தில் இயங்குகிறது என்பதை சராசரியான என்னைப்போன்ற வாசகர்கள் எளிதில் புரிந்துக்கொள்ளலாம்.

இதற்கிடையில் இரண்டு பாக்கெட் கிங்க்ஸ் , ஆளுக்கு ஐந்தரை லார்ஜ் சரக்குகளுடன் , கவிதை , காதல், இலக்கியம், சிகரெட்,புகை என்பதாய் இனிதே முடிவுற்ற பார்ட்டியில் அடுத்த பார்ட்டி என்னுடையது என்பதற்காய் வளர்மதி உறுதிமொழி எடுத்துக்கொண்டார், அதீதன் தன் பிளாட்டின் வெளிக்கதவை பூட்டப்போகிற கீழ் வீட்டுக்காரனை கெட்ட வார்த்தையால் திட்டி, பூட்டியிருந்தால் கதவை உடைத்திட போவதாய் பயமுறுத்தினார். வீட்டுக்கு போன பின்னும் போன் செய்து , பத்திரமாக சேர்ந்து விட்டதாகக்கூறினார்.


மேற்சொன்னது என்னுடைய புனைவாகிய டாஸ்மாக் வாந்தி நாவலில் இருபத்து மூன்றாம் பக்கத்தில் எழுதப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி , ரஷ்யாவின் செசன்யாவிலிருந்து அதி தீவிர ரசிகையால் அந்த பாரின் பெயர் என்னவென்றும் , இந்த புனைவை வாசித்த அன்று மட்டும் 5 பீர்களும் ஒரு ஆப்ஃயையும் தானாய் குடித்ததாக ரத்தம் தெறிக்க எழுதிய கடிதத்தை ஸ்கேன் செய்து அனுப்பி இருக்கிறார்.

அந்த அதி தீவிர ரசிகைக்காக

அந்த பாரின் பெயர் : ஹோட்டல் பிக்னிக்

ரிப்பன் பில்டிங் அடுத்த கட்டிடம் அது , சென்ட்ரல் ஸ்டேசனை ஒட்டி இருக்கிறது.

26 சொல்லிட்டுப்போனவங்க:

அமர பாரதி said...

அற்புதமாக மேஜிகல் ரியலிசத்துடன் கூடிய பின் நவீனத்துவ புனைவு.

கென்., said...

நன்றிங்க அமரபாரதி

எனக்கு மேஜிகல் ரியலிசம் பத்தி எல்லாம் எதும் தெரியாதுங்க

தமிழன்... said...

?!

Ramesh said...

Good Flow Ken!

Do write more.

Saravana Kumar MSK said...

அண்ணா.. என்னங்கணா புனைவு இது.. கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும், அதிகமா புரியாத மாதிரியும் இருக்கு.. :))

கென்., said...

:) நன்றி தமிழன்

கென்., said...

Thanks Rameshji

கென்., said...

என்ன சரவணகுமார் ,

வாங்க புரிஞ்சிக்கலாம் :)

வால்பையன் said...

சரக்கில்லாமல்
இலக்கியம்
இல்லை
இலக்கியம்
இல்லாமல்
சரக்குக்கு
வேலை
இல்லை

கென்., said...

நன்றி வால்பையன்

வால்பையன் said...

நீங்கள் சொன்ன பிக்னிக் ஹோட்டலில் எனது நண்பன் தந்தூரி மாஸ்டராக இருந்தான்.
அப்போதெல்லாம் நான் சென்னை வரும் போது ஒரே மஜா தான்.
இப்போ டெல்லி போயிட்டான்

:((

கென்., said...

ஆகா டெல்லி போயிட்டாரா ?

அடுத்த இலக்கிய நிகழ்வை டெல்லில வைச்சிப்போம் :)

வால்பையன் said...

//ஆகா டெல்லி போயிட்டாரா ?
அடுத்த இலக்கிய நிகழ்வை டெல்லில வைச்சிப்போம் :) //

அந்த தொல்லை தாங்காமா தான் அவன் டெல்லிக்கு ஓடிட்டான்.
அங்கேயும் போனா, வேற எங்கேயாச்சும் ஓடிடுவான்

கென்., said...

வால்பையன்னு பேர் வச்சிட்டு இது கூட பண்ணலைன்னா எப்படி ?

வாங்க டெல்லிக்கும் போவோம்

வால்பையன் said...

//வால்பையன்னு பேர் வச்சிட்டு இது கூட பண்ணலைன்னா எப்படி ?
வாங்க டெல்லிக்கும் போவோம் //

பாவம் அவர விட்டுடுவோம்
இப்போ வேற ஆள் மாட்டிருக்கு
அவர துரத்துவோம்

கென்., said...

யார் அது ? நாங்க ஒரு நாலு பேரு இருக்கோம் :)

வால்பையன் said...

//யார் அது ? நாங்க ஒரு நாலு பேரு இருக்கோம் :) //

த க்ரேட் அதீதன்

கென்., said...

அடப்பாவிகளா !

அவர்தான் எங்க ஸ்பான்சர் அடிமடியிலே கைய வைக்காதீங்க மக்கா

வால்பையன் said...

//அடப்பாவிகளா !
அவர்தான் எங்க ஸ்பான்சர் அடிமடியிலே கைய வைக்காதீங்க மக்கா //

நாங்களும் உங்க டீம் தான்
எங்களுக்கும் உரிமை இருக்கு

கென்., said...

சமாதானம்,

போதும் நிறுத்திக்கலாம்
அப்பறம் போர்ஹே கோச்சுப்பார் :)

D.R.Ashok said...

aduthavatti sarrakku podum podhu yenaiyum kupudunga pa....

Elakiya vathigalodu... saraaku adithacathe kidaiyadhu...!!!! Charu vai thavirthu

கென்., said...

kandipaanga kandipaa vanga neengale sponcer panunga

:)


nandringa

அனுஜன்யா said...

ஹா ஹா ! பிக்னிக் பாரா? ஐந்தரை லார்ஜா? இல்லாம போய்ட்டேனே!

//சொந்த வீட்டுக்கு ஜாமீன்ல போயிருப்பானா? // எல்லாம் கலந்துகட்டி நல்லா எழுதியிருக்கீங்க கென்.

'மீனு தந்த முத்து' எழுதிய பின்னும், கதை மாமாவை நான் பிக்சன் என்றெல்லாம் ஒதுக்குவது சரியில்லை என்று நம்ம குருநாதருக்குச் சொல்லிவிடுங்கள்.

அனுஜன்யா

கென்., said...

வாங்க அடுத்த முறை நீங்களும் அனுஜன்யா :)

Joe said...

வெள்ளிக்கிழமை ராத்திரி அதுவுமா, சரக்கு அடிக்கிறத பத்தி படிச்சுட்டு, ச்சே ச்சே, நான் போய் நாலு லார்ஜ் போட்டு வர்றேன்! ;-)

பிக்னிக் பார்-ல அடுத்த மாசம் சந்திப்போம், ஹாஹா

கென்., said...

நன்றி ஜோ நாலு போதுமா ?)

Post a Comment