முதலில் : சினிமா பற்றிய கள ஆய்விற்கான கேள்வி பதில்களுக்கு என்னையும் நம்பி கூப்பிட்டு விட்ட ஜ்யோவ்ராம் சுந்தர்க்கு நன்றிகள்.
முதலில் சினிமா என் கல்லூரி நாட்களில் மிகப்பிடித்தமான பொழுதுபோக்கு அதும் A படங்கள் மட்டுமே கணக்கு வழக்கின்றி பார்ப்பது மிகப்பிடித்தமானது என் குழும நண்பர்களுக்கும் எனக்கும்
நல்ல படம் கெட்ட படம் என்கிற பாகுபாடு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் பார்த்தபடி அலைகையில் வாசிப்பின் ஊடாக சில படங்கள் பார்க்கத்துவங்கினேன். உங்கள் அழைப்புக்கு நன்றி என் பதில்கள் கீழே
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
என் பக்கத்து ஊரில் பெரம்பூர் ( நாகை மாவட்டம்) டூரிங் கொட்டாயில் மொத்த தெருவுமாய் எம்ஜிஆர் படம் பார்க்கப்போனது நினைவுக்கு இருக்கிறது அதுவும் இரண்டாம் ஆட்டம். எனக்கு 6 வயது இருக்கலாம், போகும் போது மிக சந்தோசமாக ஓடியவன் படம் முடிந்து வருகையில் தூங்கி விழுந்து வீட்டுக்கு வந்து சேரும் வரை அறை வாங்கி அழுதபடி வந்தேன்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா
அறை நண்பன் என் அலங்கோலங்களை பார்த்துவிட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றான்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன், வாசுவை இன்னமா உலகம் நம்புது. இனிமேல் வாசு டைரக்டர் என்றால் அந்த பக்கம் மிக எச்சரிக்கையாக போவது என்று முடிவு செய்தேன்.
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
வெயில்
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அப்படி எதுவுமில்லை
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
கேமிரா ஆங்கிள்கள்
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஆவி , குமுதம், வலைப்பூக்கள் என்று எங்கும் வாசிக்கிறேன்
7. தமிழ்ச்சினிமா இசை?
வணக்கம் சன் மியுசிக் தினமும் காலையில் அறையில் அலறிக்கொண்டேயிருக்கும்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்திய படமாய் சமீபத்தில் பார்த்த the last lear, அமிதாப்பின் நடிப்பில் மெய்மறந்து போனேன். அமிதாப்பின் உச்சமான படங்களில் இதுவும் ஒன்று.
ஷேக்ஸ்பியரை மெதுவாக வாசிக்க வேண்டுமென்பது என் தற்போதைய பேராசை. அதற்கு இந்த படம் முழுமுதல் காரணம்
உலகப்பட வரிசைகளில் எப்போதும் பிடித்தமானது தி மோட்டார் சைக்கிள் டைரிஸ். சே வை ஒரு முற்போக்கு புரட்சியாளனாக மாற்றிய பயணம் பற்றிய படம். சிறிது பிசகினாலும் டாக்குமெண்ட்ரி தொனி வந்திடக்கூடும் என்றாலும் மிக மிக பிடித்தமான படம் அது.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
ரோஜா கூட்டம் கதை விவாதத்தை வேடிக்கைப்பார்த்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம்.. பெரிதாக எதுவுமே இல்லை அதான் நிஜம்
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உங்க பதில்தான் எனக்கும்
தெரியலீங்களே
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கென்ன இருக்கு ஏதோ போச்சின்னு இருந்துப்பேன். சிலர் மிகத்திண்டாடி போவார்கள் , வெள்ளிமலர்கள் படங்கள் இல்லாமல் வரும்,கிசுகிசுக்கள் கிடைக்காமல் போகும். சீரியல்கள் பற்றிய பரபரப்பு பேச்சுகள் வரலாம்
ஐந்து பேரைக் கூப்பிடணுமா.. சரி...
அட யாராவது வாங்கப்பா எனக்கு வாய்ப்புக்கொடுத்த சுந்தர்க்கு இன்னொருமுறை நன்றிகள்
Labels: கேள்வி விளையாட்டு
Very Nice!
Ramesh said...
October 24, 2008 1:22 PM
thanks rameshji
கென்., said...
October 24, 2008 1:33 PM
வெய்யில் உங்களுக்கு பிடித்த படம் என்று 'நாலாம்ப்பு' பதிவை படிக்கும் போது உணர்ந்தேன்.
அது நல்ல பதிவு.
D.R.Ashok said...
October 24, 2008 6:40 PM
thanks Ashok ji
கென்., said...
October 25, 2008 1:11 PM
"படம் முடிந்து வருகையில் தூங்கி விழுந்து வீட்டுக்கு வந்து சேரும் வரை அறை வாங்கி அழுதபடி வந்தேன். "
ada paavame!
Joe said...
October 29, 2008 2:32 PM
//அதும் A படங்கள் மட்டுமே கணக்கு வழக்கின்றி பார்ப்பது மிகப்பிடித்தமானது//
எங்களுக்கு கதை கேட்பது பிடித்தமானது
வால்பையன் said...
October 29, 2008 8:21 PM
//தூங்கி விழுந்து வீட்டுக்கு வந்து சேரும் வரை அறை வாங்கி அழுதபடி வந்தேன். //
என்ன ஒரு மறக்க முடியாத அனுபவம்!
அப்போது உங்களுக்கு யார் மீது கோபம் வந்தது,
சினிமாவின் மீதா, சினிமாவுக்கு கூட்டி போனவர்கள் மீதா
வால்பையன் said...
October 29, 2008 8:23 PM
//ரோஜா கூட்டம் கதை விவாதத்தை வேடிக்கைப்பார்த்தேன் என்று சொல்லிக்கொள்ளலாம்.//
அந்த ரோஜா கூட்டத்தில் நீங்களும் ஒரு ரோஜாவா
வால்பையன் said...
October 29, 2008 8:24 PM
Thanks Vaalpayan :)
கென்., said...
October 30, 2008 12:15 PM