Tuesday, October 21

மரணம் பற்றிய சில உரையாடல்கள்




மரணத்தை நெருக்கத்தில் வைத்திருக்கிறேன், மிக நெருக்கத்தில். சேமிப்புகள் குறித்த பதில்கள் எதுவுமே இல்லை. சேமிப்புகளே இல்லாத போது .
பதிலாய் கேள்விகள் இருக்கின்றன. கடன் இருக்கிறது , உலகத்து நடைமுறைகளை விட குறைவு தான் கடன் , ஆனாலும் கழுத்தை இறுக்கும் வண்ணம் இருக்கிறது. வீடு வானம் பார்த்து நிற்கிறது , சுவர்களால்.

இடிந்திட்ட சுவர் என்னை அழுத்திக்கொன்றிருக்கலாம். இப்போது நான் அதைத்தேடி அலையத்தேவையில்லாது .

வாழ்க்கைக்குறித்த பரிதாபங்கள் இல்லை , பேராசை இருக்கிறது. சராசரியான மனித பேராசை. ஒரு வீட்டை பெற்றோர்களுக்காய் கட்டித்தந்திட வேண்டும் என்கிற ஆசை முடியாமல் போய்விட்டிருக்கிறது. இன்னும் நிறைய சாபம் தருவார்கள், நாசமா போயிடுவேடா என்கிற வாசகங்கள் மரணத்திற்குப் பின் அர்த்தமற்று போயிருக்கும். மாரடித்து அழலாம் , இல்லாவிட்டால் கல்லாய் சமைந்து போய்விடலாம். எவ்ளோ நல்லவன் தெரியுமா ? என்கிற வாசகங்கள் பல்லிளிக்கலாம்.

எனக்கு பெண் குழந்தை பெற்று வளர்க்க வேண்டும் என்கிற பெரிய ஆசை இருந்தது . காதல் ஒரு மாதிரியான கண்ணாமூச்சியில் தோற்றப்பின்னும், பெண் குழந்தைப்பற்றிய கனவு இருக்கிறது. என் பெண், எல்லா அடிப்படை முட்டாள் தன கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து வளர்ப்பேன் என்கிற சவடால்கள் இருக்கிறது.

ஏன் தோற்றுப்போனேன்? வெறும் பணம் , பணம் சம்பாதிக்க துப்பில்லாத தனம், எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். தோற்றபின்னே எத்தனை ஆராய்ச்சிகளுக்கும் வழி இருக்கிறது. சமாதானங்கள், அறிவுரைகள் நிறைய இருக்கிறது. கேட்டு ,கேட்டு வாழ்வதன் வலியை அதிகரிக்க இருக்கிறது.

எவரிடமாவது சொல்லி அழ வேண்டும் என்கிற பத்தாம் பசலித்தனங்கள் இருக்கிறது எனக்குள்ளும், எல்லாம் சரியாகிடும்டா , வாழ்ந்து பாருடான்னு எவரேனும் சொல்ல வேண்டும் என்கிற நிலைகளுக்கு உள்ளேயும் , எப்படி இருக்கேன்னு கேட்டால் ? சூப்பரா இருக்கேன்னு பதில் சொல்கிற என் பேச்சு எவரையும் என் அருகில் நெருங்கி வர அனுமதிப்பதில்லை.

ஒரு 28 வருடங்களில் எத்தனை தவறுகள் , தண்டனைகள், தோல்விகள், கசப்புகள், பிரிவுகள், குற்றச்சாட்டுகள், துரோகங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டிருந்தேனே இத்தனை ஆண்டுகளாக.., இப்போது மட்டும் என்னை நிகழ்ந்திருக்கிறது. எதுவுமேயில்லை வேலை போய்விட்டிருக்கிறது அவ்வளவுதான். ஆனால் மரணத்திற்கு அது மட்டும் காரணம் இல்லை. உள்ளுக்குள்ளான பேராசையின் புழுக்கம் தாங்கவியலாத வெக்கை வேக வைத்திட்ட வலி. தோற்ற போதெல்லாம் இனிமேல் வெல்வேன் என்கிற முட்டாள்தனமோ, மூடத்தன நம்பகமோ வாழ வழி செய்திருந்தது இத்தனை காலமாய்.

செத்துப்போற நாய்க்கு கடைசியா இலக்கியம் மயிறுன்னு என்ன வேண்டிக்கிடக்குன்னு படிக்கிறவங்க யோசிக்கலாம். எதாச்சும் சொல்லிட்டு போகனுமே. அதுக்குதான். நான் என்ன ஆத்மாநாமா செத்தப்பின்னாடி கொண்டாட

சந்தோசமா இருங்க அவ்ளோதான். வாழ்க்கைய எவனை\ எவளை ஏமாத்தியாவது வாழக்கற்றுக் கொள்ளுங்கள்.

எத்தனை ஆசையான காதல் இது. எத்தனை ஆழமான காதல் இது. எத்தனை நெருக்கமான காதல் இது. எத்தனை உக்கிரமான காதல் இது. உன்னை கொல்கிற வார்த்தைகள் விசம் தோய்ந்த கத்தியாய் பாய்கிறது எனக்கு நன்கு புரிகிறது. தோற்ற வலி உன்னைப்போன்ற ஒருவளை இழந்து விட்ட பேராசையின் உச்சம் என்னைப்பேச வைக்கிறது.

நீ எனக்கு கிடைத்திருந்தால் நீ சொன்ன gifted வாழ்க்கை எனக்கும் கிடைத்திருக்கும் , நானும் மிக சந்தோசமாக வாழ்ந்திருப்பேன். எல்லா மனிதர்களையும் போல வாழ்ந்திருப்பேன். கிடைக்கவே கிடைக்காது என்றாவது இருந்திருக்கலாம். இன்னும் இரண்டு வாரத்தில் வரப்போகிறேன் என்கிற வார்த்தைகள் ஏற்படுத்திய மாயம் உனக்கு புரியவேயில்லை. அதன் ஆழம் உணராமல் என்னை எளிதாய் குறைசொல்கிறாய்.

உன் வாழ்வை நாசம் செய்கிறேன்று சொல்லிப்போகிறாய். நாசம் என்பதன் முழு பொருள் எனக்கு இப்போது புரிந்திருக்கிறது. என் தகுதிகள் குறித்த கேள்விகள் எழும்பிய போதெல்லாம் நீ மட்டும்தான் அதெல்லாம் எதுமே இல்லடா , நீ எவ்ளோ சூப்பர் தெரியுமாடா என்றெல்லாம் என்னை முழு முட்டாளாக்கி வைத்திருந்தாய். உன் தகுதிகள் குறித்த பயம் எனக்கு ஏற்பட்ட போதெல்லாம், என்னை அதைப்பற்றிய கவலைகளோ ,யோசனைகளோ அனுகாத வண்ணம் முத்தங்களால் மூழ்கடித்திருந்தாய். விரல் பற்றிக்கொண்டு குழந்தையென மாற்றி இழுத்துச்சென்றாய்.

ஒரே நாளில் விட்டு போகிறாய். ஒரே நொடியில் உன் தனி வாழ்வை பற்றி சிந்திக்கிறாய், இனி பேசி எதுவும் ஆக போவதில்லை என்கிறாய்

மந்தையாட்டுக்கூட்ட ஆட்டுக்குட்டி, வழித்தப்பி உன் மடியேறி கிடந்தேன். நடுக்காட்டில் விரட்டியடிக்கப்படுகையில், இறத்தலை தவிர்த்த வேற வழியற்று போனவனாகிறேன். வேற வழியற்று

அறையில் இருக்கும் புத்தகங்கள், ஒரு வைர பூ போன்றது மற்றும் சில புகைப்படங்கள் அனைத்தும் தனிப்பட்ட முறையில் உன்னிடம் சேர்ப்பித்திட வேண்டும்.

என் மரணத்திற்கு முழுக்காரணம் என் வேலை போனதுதானே தவிர வேறேதும் இல்லை. என் கடனை அடைக்க வேற வழியேதும் இல்லாத காரணத்தால் இந்த முடிவை தேடிச்செல்கிறேன். மொத்த வாழ்நாள்ளேயும் நான் யாருக்குமே உபயோகமாக வாழவில்லை .

இனிமேல் வாழ்ந்து ஆகிவிட போகிறதும் எதுவும் இல்லை என்பதால் இந்த முடிவை என் சுய புத்தியுடன் நானே எடுக்கிறேன்.

தற்கொலை முடிவுகள் சில குறிப்புகள்

1. மிக உக்கிரமான மனநிலையில் மரணம் குறித்த முரண்பாடான எண்ணங்கள் தோன்றி உடைகின்றன மழை நேர நீர்க்குமிழிகள் என

ஒன்பதாம் வகுப்பில் தோற்றுப்போனதற்காய் கொய்யா மரத்தில் தூக்கு மாட்டி செத்துப்போன நண்பனின் முகம் நிழாலாடுகிறது. மரணத்திற்கு பின்னான அவனைப்பற்றிய தீர்மானங்களின் படி , தற்கொலை ஒரு மாபெரும் கோழைத்தனம் என்பதான முடிவு வந்தது.


2. சொந்த வீட்டில் இருந்து துரத்தப்பட்ட பின் மரணம் குறித்த தேடல் இருந்தது. இனி வாழ்வதன் அர்த்தம் அநாவசியமானதாயிருந்தது.

எதைக்குறித்தும் அக்கரையற்ற வாழ்வில் 40 வயதை நெருங்கும் நண்பன் ஒருவரின் வாழ்வு பயமேற்படுத்தியபடி இருந்தது. வாழ்தல் என்பதை எப்படி தீர்மானிக்கலாம்? உயிர்ப்போடு இருத்தல் அல்லது இருப்பை நிரூபித்தல் எது நிஜம்?

3. காதலின் ஆழமான வடுவின் கீறலில் தண்டவாளம் தேடி போனபின் வலித்தது.

எப்போதும் சிரித்து, கிண்டலாய் பேசும் பாய் ஒருவரின் தற்கொலை நிழலாடியது. தண்டவாளத்தில் துகள்களாக , சாக்கு மூட்டையாய் பார்த்தது பயமேற்படுத்தியது. காதல் மட்டும் வாழ்வு இல்லை என்பதாய் ஆசுவாசப்படுத்திக்கொண்டாயிற்ற பின் ரெயில்களை வேடிக்கைப்பார்த்ததில் நகர்ந்தது தற்கொலை முடிவின் இரவு.

4. இப்போதும் அப்படி ஏதும் நிகழ்ந்திடாதா? வேலை இழப்பு மரணத்தில் முடியுமா?

எப்படி தீர்மானிப்பது, விஷமா? மறுபடியும் தண்டவாளமா? வாழ்வின் மீதான பேராசை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இறப்புக்குப்பின் என்ன நிகழும்?

இப்படி எல்லாம் பேசி ,எழுதி முடிச்சிட்ட அப்பறமா,
மச்சான் என்னைக்கு ஊருக்குப்போக போறே? நைட் சரக்கு பார்ட்டி வச்சிக்கலாம், நீயே பார்ட்டி கொடுத்திடு என்கிறவனை பார்த்து சாவு சிரித்தபடி இருக்கிறது.

12 சொல்லிட்டுப்போனவங்க:

வடகரை வேலன் said...

//ஒரு 28 வருடங்களில் எத்தனை தவறுகள் , தண்டனைகள், தோல்விகள், கசப்புகள், பிரிவுகள், குற்றச்சாட்டுகள், துரோகங்கள் எல்லாம் தாங்கிக்கொண்டிருந்தேனே இத்தனை ஆண்டுகளாக.., இப்போது மட்டும் என்னை நிகழ்ந்திருக்கிறது. எதுவுமேயில்லை வேலை போய்விட்டிருக்கிறது அவ்வளவுதான். ஆனால் மரணத்திற்கு அது மட்டும் காரணம் இல்லை. உள்ளுக்குள்ளான பேராசையின் புழுக்கம் தாங்கவியலாத வெக்கை வேக வைத்திட்ட வலி. தோற்ற போதெல்லாம் இனிமேல் வெல்வேன் என்கிற முட்டாள்தனமோ, மூடத்தன நம்பகமோ வாழ வழி செய்திருந்தது இத்தனை காலமாய்.//

எக்ஸலண்ட்.

Saravana Kumar MSK said...

//இப்படி எல்லாம் பேசி ,எழுதி முடிச்சிட்ட அப்பறமா,
மச்சான் என்னைக்கு ஊருக்குப்போக போறே? நைட் சரக்கு பார்ட்டி வச்சிக்கலாம், நீயே பார்ட்டி கொடுத்திடு என்கிறவனை பார்த்து சாவு சிரித்தபடி இருக்கிறது.//

வழக்கம் போல் பின்னீட்டீங்க கென்.. திரும்ப திரும்ப சுற்றி சுற்றி இதுதான் நடக்கிறது..

கிருத்திகா said...

மரணத்தைப்பற்றிய சிந்தனைகளும் உரையாடல்களும் வாழ்வில் எப்போதும் தெலிவையை தந்திருக்கின்றன்... கென் உங்களுக்கும் தானே..

கென்., said...

Thanks vadakarai velan, kiruthika, saravanakumar :)

D.R.Ashok said...

கென்
கண்ணுக்கு புலப்படாத கரங்களினால் நாம் புரட்டி போடும்போது வரும் குழப்பம் பரிதவிப்பு எண்ண ஓட்டங்கள், தானாய் வரும் மரணத்தை தேட துவங்கும். இது எல்லோருக்குமானது - புதியதொரு விதி செய்வோமென மனம் மாற்றி சரக்கடித்து தெளிந்தபின் மறுபடி துயர் கொண்டு மறுபடி .....

சரக்கு ஒன்றே தீர்வு இல்லை .... நிறைய தண்ணிர் விட்டு அடிக்கும்

அன்புடன்
D.R.அசோக்

கென்., said...

vaanga sarakku adikalam ashok :)

Bee'morgan said...

அருமை கென்.. எனக்கு எதுவுமே சொல்லத் தோணல.

D.R.Ashok said...

saraku adikardhukku no. kodutha... adhaiyum blogla pottutte

D.R.Ashok said...

நிறைய தண்ணிர் விட்டு அடிக்கவும்

typing mistake

வால்பையன் said...

புனைவு என்று குறிப்பிடிருந்தாலும்
அழத்தோன்றுகிறது எனக்கு

கென்., said...

நன்றி பாலமுருகன் , அசோக்,வால்பையன் :)

அழுகாச்சியா இருக்கா எனக்கு இல்லன்னு சொல்ல சொல்றாங்க :)

Joe said...

சரக்கடிக்க நான் ரெடி! இடம், தேதி முடிவு செய்த பின் மின்னஞ்சல் அனுப்பவும்! ;-)

Post a Comment