Wednesday, November 19

உருமாறும் மீன்கள்

தலைப்பிரட்டைகளை மீன்கள் என்பதாய்
விவரிக்கிறாய்
வண்ண வண்ணமான கண்ணாடிக்குடுவை
கண்முன் விரிகிறது
நீர் நிரப்பி உணவிட்டு பெரிதாய்
வளர்க்கப்போவதாகவும்
விருந்தினர்கள் புடைசூழ்கையில்
செதில் அலைய நீந்துமெனவும் பேசிக்கொண்டே இருக்கிறாய்

உருமாற்றங்கள் குறித்த அறிவை
நிராகரிக்கிறாய்
மீனாய் மாறிடுகிறது இப்போது
உன் கண்களில்

தூரத்து மழைக்கால தவளையின்
குரல் கேட்டுக்கொண்டே
இருக்கிறது என்னுள்

13 சொல்லிட்டுப்போனவங்க:

வடகரை வேலன் said...

கவிதையென்பது அனுபவத்தைப் பிரதியெடுப்பதாக அமையவேண்டுமென்ற இலக்கணத்திற்கேற்ப இருக்கிறது. பால்யத்தின் சேட்டைகளில் இதுவும் ஒன்று.

நல்ல கவிதை.

கென்., said...

நன்றிங்க வடகரை வேலன்

ஊர்வசி said...

உங்கட கவிதைகள் எதும் புரியவில்லை எனக்கு.தலைப்பிரட்டைன்னா என்ன ?

ஊர்வசி said...

தலைப்பிரட்டை மீன்னு எதும் இருக்கா

ராம்/Raam said...

தூரத்து மழைக்கால தவளையின்
குரல் கேட்டுக்கொண்டே
இருக்கிறது என்னுள்

kavithai vera oru thalathirku eduthu selkirathu intha varikal

Ramesh said...

Wow! Actually there is a term called Morphism in Drama, showing the small growing to big... my teacher in NY school used the same example...

Well I get the meaning ("meen") of a small fish going in a small pond... comparing with a girl in the mind, of love interest... you group up girl, like the fish.

something like that... each reader should get the best out of what is written...

You are definitely a super poet!

(I definitely need to see a post, on what all you read, every week Ken)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

எனக்கு மிகப் பிடித்திருக்கிறது இந்தக் கவிதையும்.

Siraj Nawas said...

Ken,

Crafted brilliantly.
I interpret your poem as the 'fish' is not the 'embryo' here, the innocense / virtue or the purity of the girl is a point to note. " தூரத்து மழைக்கால தவளையின்
குரல் கேட்டுக்கொண்டே
இருக்கிறது என்னுள் " - the poet brilliantly acknowledge her innocense or inanity... Very well done...

தூரத்து மழைக்கால தவளையின்
குரல் கேட்டுக்கொண்டே
இருக்கிறது என்னுள்zhum.....

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் தலைப்பிரட்டை என்பது வாற்பேத்தை என எங்கள் பகுதியில் கூறப்படும்;தவளையின் இளம் பருவம் அதாவது முட்டைக்குள் இருந்து வெளியேறியதும் வாலுடன் இருக்கும் பருவம். சாயலுக்கு
மீன் போல் தான் இருக்கும்;
கடைசியில் தவளை யெனும் சொல்லும் வருவதால் என் ஊகம் சரியெனக் கருதுகிறேன்.
இந்தத் தலைப்பிரட்டை எனும் சொல்லை இன்றே கேள்விப்பட்டேன்.

அனுஜன்யா said...

கென்,

நல்லா இருக்கு. பதட்டமும் அழகாக வெளிப்படுகிறது.

அனுஜன்யா

கென்., said...

நன்றிகள்

ரமேஷ், ஜ்யோவ்ராம் சுந்தர்,
Siraj Nawas ,யோகன் பாரிஸ்(Johan-Paris) ,அனுஜன்யா

:)

Saravana Kumar MSK said...

கவிதை செமையா இருக்கு கென்.. :)

த.அரவிந்தன் said...

தலைப்பிரட்டை என்கிற வார்த்தை எனக்குத் தெரிந்த வார்த்தையாக இருந்தும் சென்னை வந்துவிட்ட பிறகு முற்றிலும் மறந்துபோய்விட்டது. என்னுடைய சிறுகதை ஒன்றில் தங்கள் கவிதை போன்ற காட்சியை பதிவு செய்தபோது இந்தப் பெயர் தெரியாததால் தவளைக்குஞ்சுகள் என்றே எழுதினேன். நினைவுப்படுத்தியதற்கு நன்றி. என்னை என் ஊருக்கு அழைத்துப் போய்விட்டக் கவிதை.

Post a Comment