Sunday, May 24

புத்தம் சரணம் கச்சாமி

நகங்களின் சதைத்துணுக்கை ருசித்தபடி
சிரிக்கிறான் புத்தன்
அமைதி தவழும் அந்தகாரமுகம்
குருதிப்புனலில் பரிகசிக்கிறது
மரணம் நிகழ்ந்திடாத வீடொன்றில்
பொருள் கேட்க சொன்னவன்
உயிர்ப்பறித்த வேட்கை தீர்ந்திடாமல்
சிரிக்கிறான்
நிறமிழந்த புலிகளை கூண்டுக்குள்
அடைத்தபின்
புற்களை தின்ன சொல்லி
கூக்குரலிடுகிறான்
யசோதைகளுக்கு என்ன புரியும்
எல்லாம் முடிந்தபின் ஆசையே
காரணம் என்றவனின் பேராசைக்கு
இறந்தவர்கள் இறக்கப்போகிறவர்களின்
எண்ணிக்கையில் சில ஆயிரம் கூடலாம்
அல்லது மொத்தமாய் மாளலாம்
நகங்களின் சதைத்துணுக்கை ருசித்தபடி
சிரிக்கிறான் புத்தன்

6 சொல்லிட்டுப்போனவங்க:

Victor said...

Arumai

Joe said...

அற்புதமான கவிதை.

D.R.Ashok said...

புரிகிறது கென்.... சூப்பர்

arumugam said...

I really enjoyed this poem..
your narration is excellent..
wish you all the best in your future attempts..
keep roaring dude..!

தோழி said...

Hello,

I donno whether i understood your poem or not. Just read it only once. But mugathil araigirathu. Great Job. Keep it up.

சேரல் said...

nalla kaidhai naNbarE!

-priyamudan
sEral

Post a Comment