1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முழுப்பெயரில் பாதி என்றாலும் ( கென்னடி – கென்) இதற்கு ஆங்கிலத்தில்(Ken- Understanding or knowledgeable) என்றொரு அர்த்தம் இருப்பதாக ஒருவர் கூறியதால் சரி பெயரிலாவது அறிவு இருக்கட்டுமென வைத்துக்கொண்டேன்..

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

இரு நாட்களுக்கு முன்பு தாங்கமுடியாத கோபத்தில் .

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

என்னுடைய கையெழுத்து கொஞ்சம் நன்றாக இருக்கும் என் நண்பர்கள் சிலருக்கு காதல் கடிதங்கள் எழுத உதவியது அது.

4.பிடித்த மதிய உணவு என்ன?

மதிய உணவாய் வெஜிடேரியன் எதுவென்றாலும் சரிதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

உடனே நட்பு எல்லாம் எனக்கு சரி வராது என் கோபத்தை தாக்குப்பிடித்தவர்கள் மட்டுமே என்னோட நட்பாக இருக்க முடியும்

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல்தான் எனக்கு பிடித்தமான இடம், எப்போதுமே ஆற்றில் குளித்துப்பழகிவிட்டதால் ( வீடு ஆற்றுக்கு வெகுப்பக்கத்தில் இருப்பதால்) அருவியில் நான் குளித்ததேயில்லை

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்களை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?


நான் ஒரு சுயநலவாதி, திமிர்பிடித்தவன் அப்பறம் என்னுடைய புலம்பல் எனக்குப்பிடிக்காதது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

சரி பாதியா அட போங்கையா ஒரு பாதிக்கே தாங்கல.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நான் வருந்தறதாயில்லை

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

கறுப்பு நிற பேண்ட் நீல அரைக்கைச் சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

அலுவலகத்தில் எந்த பாட்டு கேட்கும் சொந்த பாட்டைத்தவிர.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீல நிறம் எனக்குப் பிடித்தமானது. அதனால் அந்த நிறமாகவே மாற்றிவிடுங்கள்.

14.பிடித்த மணம்?

மண் வாசனை, குழந்தை வாசனை... நிறைய உண்டு.

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

நான் யாரையும் அழைக்க விரும்பலை .

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சுந்தர் எனக்கு ஒரு ரோல் மாடல் அவரின் கதைகளைப்படித்துதான் நான் தீவிரபுனைவு கதைகள் எழுதத்துவங்கினேன்.

17. பிடித்த விளையாட்டு?கபடி ,வாலிபால் , கிரிக்கெட்
18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?இயல்பான எல்லா திரைப்படங்களும்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க திருட்டு விசிடியில்.

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

ரமேஷ் பிரேதனின் சாராயக்கடை, எஸ் ராவின் பதினெட்டாம் நூற்றாண்டின் மழை( முடிச்சிட்டேன்)

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


இப்போது மாற்றுவதாயில்லை

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : சாவு மேளம்.
பிடிக்காதது : வெடிச்சப்தங்கள்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மூவாயிரம் கிமீ ( மஸ்கட்டில் இருக்கிறேன் தற்சமயம்)

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அப்படின்னா

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

கடவுளைப்பற்றிய கட்டுக்கதைகள் போதனைகள்

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

எதுவுமேயில்லை

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே இருந்தால் போதும்னு நினைக்கிறேன்

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

மனைவியே இல்லை அப்பறம் என்ன கேள்வி இது


32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..? Meshed

மயிறு

தலையில் இருக்கிற வரைக்கும் ஆட்டம் உதிர்ந்திட்டா :)


(இந்தத் தொடர் விளையாட்டிற்கு என்னை அழைத்த ஜியோவ்ராம் சுந்தர்க்கு நன்றிகள்)

12 சொல்லிட்டுப்போனவங்க:

யாத்ரா, பைத்தியக்காரனுக்கு பிறகு மொக்கை கேள்விகளுக்கும் ஓரளவு ஸ்வாரஸ்யமாக பதலளித்திருப்பவர் நீங்கள் தான் ...

June 10, 2009 9:14 PM  

உங்கள் பதில்களை மிகவும் ரசித்தேன்.

June 11, 2009 1:01 AM  

நன்றிகள் நந்தா , யாத்ரா

June 11, 2009 12:17 PM  

நல்ல பதில்கள், சுருக்கமாக, சுவாரஸ்யமாக இருந்தது.

June 14, 2009 8:43 PM  

உயிரோசையில் வெளிவந்த “ஒரு ஓமன் ரியால் 127 ரூபாய்” நீங்கள் எழுதிய சிறுகதையா?

எதார்த்தம் தொனிக்க அருமையாக இருந்தது.

June 24, 2009 3:32 PM  

நன்றிங்க ஆமாம் நாந்தான் எழுதினேன்

June 24, 2009 3:33 PM  

Nalla iruku intha kelvi bhathil post :))

June 25, 2009 1:15 PM  

நல்லாருந்துச்சு நண்பா..

ஏன் வாராவாரம் டோண்டு சார் மாதிரி நீயும் கேள்வி பதில் போடக்கூடாது

June 28, 2009 10:56 AM  

What do you think of this post-modern piece?

http://www.tamilhindu.com/2009/07/facts-amidst-gospels/

July 06, 2009 2:44 AM  

ரொம்ப நாளாச்சு.. எழுதுங்க தல..!

July 08, 2009 4:12 PM  

அது சரி...

July 11, 2009 9:02 PM  

நல்லா இருந்தது பதில்கள். சுவாரஸ்யத்தை விட உண்மைக்கு முதலிடம் கொடுத்து இருக்கீங்க. எனக்கு யாத்ரா, ராம் CM, முபாரக் மற்றும் உங்கள் பதில்கள் இவற்றில் பிடித்தது. நான் இந்தத் தொடரில் நிறைய பேரின் பதிவுகளைப் படிக்கத் தவறிவிட்டேன் என்பதையும் சொல்லவேண்டும்.

அனுஜன்யா

July 12, 2009 1:50 AM  

Newer Post Older Post Home

Blogger Template by Blogcrowds