
Well, now,
if little by little you stop loving me
I shall stop loving you little by little.
If suddenly
you forget me
do not look for me,
for I shall already have forgotten you.
If you think it long and mad,
the wind of banners
that passes through my life,
and you decide
to leave me at the shore
of the heart where I have roots,
remember
that on that day,
at that hour,
I shall lift my arms
and my roots will set off
to seek another land.
But
if each day,
each hour,
you feel that you are destined for me
with implacable sweetness,
if each day a flower
climbs up to your lips to seek me,
ah my love, ah my own,
in me all that fire is repeated,
in me nothing is extinguished or forgotten,
my love feeds on your love, beloved,
and as long as you live it will be in your arms
without leaving mine.
Pablo Neruda
ஏன் எல்லாமே மாறிப்போய்விடுகிறது , எங்கிருந்து வந்து தொலைத்தது என் மேலான உன் வெறுப்பு . நான் பைத்தியக்காரனென்றும் , புலம்பித்தவிக்கிறேனென்றும், எல்லா சிறு சந்தோசங்களையும் அழித்து விடுகிறவனென்றும் அடுக்கும் உன் குற்றச்சாட்டுகள் மிகச்சரியானவைதான். எனக்கும் உறவுகளுக்கும் எப்போதும் சிக்கலில்லாமல் இருந்ததில்லை. எப்போதுமே தோற்றுவிடுகிற பக்கத்தில் இருப்பவனுக்குதான் தெரியும் வலிகளும், அவமானங்களும். தோல்விக்குப்பிறகான எல்லா கேள்விகளும் பார்வைகளுமே பூதாகரமானதாகத்தான் படுகிறது பாழும் மனதிற்கு.
என்னோட கவிதையில் வரும் சஹானா என் அண்ணன் பொண்ணு. இப்போ நாலாவது படிக்கிறாள். எப்போ தொலைப்பேசினாலும் அவள் பேசுகிற வார்த்தைகள் “ எப்பப்பா ஊருக்கு வருவ, எனக்கு கொலுசு வாங்கிட்டு வா, அங்க ஒட்டகம் இருக்கா என்பதுதான் இவற்றையே மாத்தி மாத்திக்கேட்பாள்.
கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
கர்த்தர் சொன்னாரா இல்லையான்னு எல்லாம் எனக்குத்தெரியாது ஆனால் சிறுவயதுத்தொடங்கி மனுசர்களின் நினைவுகள் பொல்லாததாயிருக்கிறது என்பது மிகச்சரி என்றே எனக்குப்படுகிறது. நேசம் என்பது சிறகுகள் போன்று தோற்றமளித்தாலும் அதனுள் எப்போதுமே கூரிய நகங்கள் ஒளிந்தேயிருக்கின்றன. கிழித்து ரத்தம் புசிக்க ஒருபோதும் அது மறப்பதில்லை. எனக்கு நிகழ்ந்த எல்லாவற்றிலும் என் தவறு மிகப்பெரிது.
தகுதிகளைத்தாண்டி யோசித்தது, கனவின் கைப்பிடிக்குள் மூழ்கிக்கிடந்தது. துடைத்தெறிந்து விட்டு போகத்தெறியாதது இன்னும் என்னவெல்லாமோ இருக்கிறது.
வெயில் பொறுக்க முடியாத மஸ்கட்டின் பாலைவனத்திற்குள் எரிந்துப்போய்க்கொண்டிருக்கையில் ஒரு வயதான ஓமானியைப்பார்த்தேன். அவர் ஹிந்தியில் சொன்னார் இத்தனை வெயில் இந்த பருவத்தில் நிலவவில்லையெனில் நமக்கு ஒரு பேரிச்சம்பழமும் கிடைக்காது என்று. அடிக்கிற வெயிலுக்கும் ஒரு பலன் இருக்கையில் தோல்விகளைப்பற்றி மிகுந்த மனவருத்தம் அடையத்தேவையில்லை என்கிற மனப்பக்குவம் வந்தபடியிருக்கிறது.
காமம்தான் அடிப்படை, எந்த பெண்ணிடமும் அது கிடைக்கும் ஒரே ஒரு பெண் தான் உலகம் என்றால் நீங்கள் காண்டம் கிடைக்காத ஊரில் எய்ட்ஸ் நோய்க்கொண்ட பெண்ணுடன் உறவுவைத்துக்கொள்பவனாய் ஆகிடுவீர்கள். மிகத்தெளிவான பெண்ணொருத்தி எனக்கு தோழியாக வந்திருக்கிறாள். டான்ஸ் பாரில் ஆடுவதுதான் அவள் வேலை , மாலை ஐந்து மணியிலிருந்து விடியற்காலை 3 மணி வரையில் ஆடுவதுதான் அவள் வேலை. அவள் அறையில் ஐந்து பெண்கள் இருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ஹோட்டல் என்று வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொள்கிறார்கள். தினமும் டிப்ஸ் ஒவ்வொருவருக்கும் 50 ரியால் முதல் 100 ரியால் வரை கிடைக்கிறது நமது பணத்தில் கிட்டத்தட்ட 12000 ரூபாய் ( 100 ரியால்) . எல்லோருமே 3 மாத விசிட் விசாவில் வந்திருக்கிறார்கள். மூன்று மாதம் இங்கும் அடுத்த மூன்று மாதம் மும்பையிலுமாய் சம்பாதிக்கிறார்கள்.
எல்லோருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட காதலும் அதன் தோல்வியும் இருக்கிறது. இப்போது அவர்கள் மனிதர்களை மனிதர்களாய் பார்ப்பதில்லை. பணம் இருந்தால் கலவிக்கொள் இல்லையா தள்ளி நின்னு பல்லிலிச்சு பார்த்துட்டு போ என்பதாயிருக்கிறது.
என் தோழி மஹாராஷ்டிராவின் உள்ளூர் கிராமத்தில் பிறந்தவள் 16 வயதில் திருமணமாகி மும்பை வந்தவுடன் கணவனாலேயே விற்கப்பட்டவள். பிறகு தொழில் நேர்த்தி தெரிந்து டான்ஸ் பார்களில் ஆடுவது உபதொழிலாக உடல் தேவைப்பட்டால் ஆண்களைத்தேடுவது எனமாறிக்கொண்டாள்.
பகல்வேளைகளில் மிதமான போதையில் இருப்பாள் , என்னைப்பார்த்தால் ஏண்டா எப்போவுமே டல்லா இருக்கே ( அவளுக்கு தமிழும் தெரியும் மும்பையில் கற்றுக்கொண்டாளாம்) என்றபடி இழுத்து மடியில் படுக்க வைத்துக்கொள்வாள். அவர்களின் அறையில் ஆடைகள் , உள்ளாடைகள் மேக் அப் சாதனங்கள் இன்னும் என்னென்னவோ இறைந்துக்கிடக்கும். எப்போதுமே முழுக்கப்போர்த்திக்கொண்டு உறங்கும் ஒரு பெண் மிக அழகாக இருப்பாள். அவள்தான் இரவுகளில் வெறும் ஜட்டிப்போன்ற ஒரு ஆடையுடனும் அரைகுறை மேலாடையுடனும் ஆடிக்கொண்டிருக்கிறவள்.
என்னைத்தொடர்ச்சியாக திட்டுகிறவள் கேட்டாள் நீ எதுக்கு சும்மா இங்க வந்திட்டு உட்கார்ந்திட்டு போற , நீ வரதால நாங்க எந்த கஸ்டமரையும் வரச்சொல்றதில்ல தெரியுமா எனக்கடிந்துக்கொண்டாள். என் தோழியோ அவ கிடக்கிறாடா விடு , நீ சொல்லு எதுக்கு என்கிட்ட வர, செக்ஸ் வச்சிக்கனும்னு உனக்கு தோணலையா இல்லை எய்ட்ஸ் வந்திடும்ம்னு பயப்படுறியா எனக்கேட்டாள்.
அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தை படித்ததை நினைத்துக்கொண்டேன். மிக அழுந்த அவளின் உதடுகளில் முத்தமிட்டேன் விஸ்கியின் வாசம் தீராமல் என்னுடலுள்ளும் வீசத்துவங்கியதாய் மிதக்கத்துவங்கினேன். உறக்கம் கலைந்திருந்தது விடிந்திருந்த வானம் சன்னலின் வழி வெப்பக்கிரகணங்களை எறியத்துவங்கியது. விறுவிறுப்பான சாலையில் 120 கிமீ வேகத்தில் வாகனங்கள் பறக்கத்துவங்கின.
அலுவலகக்கணினியில் ஆன்லைனில் தேடத்துவங்கினேன் வேறொருவளை.
Labels: புனைவு
வழக்கம் போலவே ரொம்ப நல்லா வந்திருக்கு கென். இவ்வளவு உணர்வுகள் தத்தளிக்கும் போது, அவசியம் நீங்க நிறைய எழுதணும்.
பாப்லோ நெருதா கவிதை நல்லா இருக்கு. தமிழாக்கம் செய்திருக்கலாமே.
அனுஜன்யா
அனுஜன்யா said...
July 12, 2009 2:04 AM
நன்றி அனுஜன்யா,’
எனக்கு ரொம்ப பிடிச்ச கவிதை அதை நானே மொழிபெயர்த்து கொல்ல வேணாம்னுடான் பண்ணலை.
நீங்க பண்ணிக்கொடுங்க ப்ளீஸ்
கென்., said...
July 12, 2009 12:44 PM
ஜ்யோவ்ராம் சாரின் பதிவு தந்த இணைப்பு என்னை இங்கு சேர்த்தது. அட்டகாசம். சிந்தும் வார்தைகளை மனம் அள்ள அள்ள அதன் கனம் தாங்காமல் கீழே விழுந்தது விழுந்தபடி இருக்கிறது. தனிமையின் கவித்துவமான சோகமும் அற்பமான நிமிடஙளையும் சும்மா தெறிக்க விடுகிறீர்கள். வணங்குகிறேன்.
வெங்கிராஜா said...
July 12, 2009 8:07 PM
அனுஜன்யாவும், வெங்கியும் சொன்னது தான் என் கருத்தும் ... ஆனால் அனுஜன்யா சொன்னதில் // தமிழாக்கம் செய்திருக்கலாமே. // என்பது நீங்கலாக, வெங்கி சொன்னதில் // அட்டகாசம். சிந்தும் வார்தைகளை மனம் அள்ள அள்ள அதன் கனம் தாங்காமல் கீழே விழுந்தது விழுந்தபடி இருக்கிறது. தனிமையின் கவித்துவமான சோகமும் அற்பமான நிமிடங்ளையும் சும்மா தெறிக்க விடுகிறீர்கள் // என்பதை மட்டும்
Nundhaa said...
July 12, 2009 10:18 PM
நன்றி வெங்கிராஜா ,நந்தா :)
கென்., said...
July 13, 2009 11:13 AM
//
நேசம் என்பது சிறகுகள் போன்று தோற்றமளித்தாலும் அதனுள் எப்போதுமே கூரிய நகங்கள் ஒளிந்தேயிருக்கின்றன. கிழித்து ரத்தம் புசிக்க ஒருபோதும் அது மறப்பதில்லை. எனக்கு நிகழ்ந்த எல்லாவற்றிலும் என் தவறு மிகப்பெரிது.
//
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
பாப்லோ நெருடாவின் கவிதை, அதைத் தொடர்ந்து உங்கள் கட்டுரை, அருமை...
நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இணையத்தில் எவன் எவனோ எதையாவது எழுதிட்டு தான் இருப்பான், அவனுக்கெல்லாம் போய் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது.
தேவையில்லாத நேர விரயம்.
என் பேச்சைக் கேட்டு கவிதை, கட்டுரை எழுதினாலும் சரி.
"டேய், உன் வேலை மயிரைப் பாருடா, நாங்க அப்படித் தான்"-ன்னு சொன்னாலும் சரி.
Joe said...
July 14, 2009 6:13 PM
Thanks Joe :)
No bad words :):)))))))
கென்., said...
July 15, 2009 1:08 PM
ரொம்ப நாளுக்கு அப்புறம் எழுதரிங்கா... பதிவு மிகவும் நன்றாக உள்ளது...
//எப்போதுமே முழுக்கப்போர்த்திக்கொண்டு உறங்கும் ஒரு பெண் மிக அழகாக இருப்பாள்.//
முற்றிலும் உண்மை!!
லிங்காபுரம்-சிவா said...
July 16, 2009 12:48 PM
நன்றிகள் சிவா :)
கென்., said...
July 16, 2009 1:03 PM
//நேசம் என்பது சிறகுகள் போன்று தோற்றமளித்தாலும் அதனுள் எப்போதுமே கூரிய நகங்கள் ஒளிந்தேயிருக்கின்றன. கிழித்து ரத்தம் புசிக்க ஒருபோதும் அது மறப்பதில்லை.
How much pain my friend! Could feel the deep pain in the words.
Anand said...
August 11, 2009 9:47 AM