எனக்கு எப்போவுமே தேமேன்னு கவிதைன்னு எதையாவது கிறுக்குறது இல்லாட்டி மூணாம்பு நாலாம்பு படிச்சப்போ நடந்த நரிக்கதை சொல்றது அதும் இல்லாட்டி சாராயக்கடை தோசை , தொக்கு , கொக்கு மடையான்னு கிறுக்குறதுதான் வேலை. முக்கியமா காதல் தோல்வி பற்றி வெறி வெறியா எழுதிக்குவிக்கிறது, அப்படியாச்சும் புது பிகர் எதும் மாட்டிடாதான்னு நப்பாசையில.
இப்படியே போயிக்கிட்டு இருக்கிறப்போதான் சாரு வந்தார் வாழ்க்கையில
வாரிசுன்னு சொன்னது சாருவோட பெருந்தன்மை. அவரோட பாராட்டும் குணம் எனக்கு அதுல துளிகூட நம்பிக்கையில்லை. முழு நேர எழுத்துன்னு வெறிப்பிடிச்சு வேலை செய்ற அளவுக்கு எனக்கு திறமையோ அறிவோ கிடையாது. ஏதோ எம்புருசனும் சந்தைக்குப்போனான்ற கதையா ஓசில வலைப்பூவில கிறுக்கிட்டு இருக்கேன்.
சாருவுக்கும் எனக்குமான நட்பு தாமரை இலை தண்ணீர் மாதிரிதான். சாரு என்னை வாரிசுன்னு சொன்னப்பிறகுதான் அவர்கிட்ட முதன் முதலில் பேசினேன். அதுக்குப்பிறகு ஒரு மாதம் கழித்துதான் போய் நேரில் பார்த்தேன். சொல்லப்போனா சாருதான் எனக்கு பார்ட்டி கொடுத்தார். வாசிக்க வேண்டிய அவசியம், எழுத்துன்னு வந்திட்ட செய்ய வேண்டிய உழைப்புன்னு அவரைப்பார்த்த பிறகு எனக்கு பெரிய நம்பிக்கையே வந்திடுச்சு. சாருன்னு கூப்பிடுங்க கென்னுன்னு ஆரம்பிச்சு ஒரு நண்பனா மாறி அவர் பேசின பின்னாடி அவரைப்பத்தின தவறான பிம்பங்கள் உடைஞ்சி போயிடுச்சு.
சாருவோட எழுத்து தனி உலகம் , அது சாக்கடைன்னு துப்புற ஆளுங்கதான் வெறிப்பிடிச்சு படிக்கிறாங்க, சாருவைக்கல்லால் அடிச்சு கொல்லன்னும்னு குதிக்கிறவங்க உள்மனசுல சாருவோட எழுத்து மேல தீராத மோகம் இருக்கு. அதுதான் சாருவோட எழுத்துக்குக்கிடைச்ச வெற்றி.
ஒரு நாள் கூட என்னிடம் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பணம் கேட்டோ வேறு ஏதாவது கேட்டோ சாரு பேசியதில்லை. நான் கொடுத்ததும் இல்லை. அவர்தான் என்னை அவரின் தனிப்பட்ட நண்பர்களின் பார்ட்டிக்கு டீக்கடை என்றழைக்கப்படும் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துப்போயி அவரின் நண்பர்களிடத்தில் என் நண்பர் கென் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
சாருவிடம் தனிப்பட்ட முறையில் பழகியவர்களுக்கு மிக நன்றாகத்தெரியும் அவரை நீங்கள் எந்த அளவுக்கும் விமர்சிக்க முடியும், மிக எளிமையாக எதைப்பற்றியும் விவாதிக்க முடியும். எழுத்தின் பிரமாண்டமோ , அகந்தையோ எதுவுமில்லாமல் வெகு சாதாரண மனிதராக வெகு நட்பாக பழகுபவர்.
அவரைப்பற்றிய எந்த விமர்சனத்திற்கோ , வெட்டி சண்டைகளுக்கோ நான் வால்பிடித்ததுமில்லை , எதிர்க்கோசம் இட்டதுமில்லை. சாரு அதை எதிர்பார்க்கிற மனிதரும் இல்லை.
இதையெல்லாம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு பிறகு இங்கு பதிவிட காரணம் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர்( ஒருத்தர்க்கு கண்வலி வந்தா சும்மா இருக்கிறதில்லை வந்து என் கண்ணை பாரு பாருன்னு கூப்பிட்டு நமக்கும் அதை ஒட்டி விடறது :) )
அவரின் பதிவை தொடர்ந்து நானிட்ட பின்னூட்டத்திற்கு நண்பர் ரோசா வசந்த் பதிலளித்திருக்கிறார்.
ரோசா வசந்தின் பின்னூட்டம்
சாருவை ஐஸ் வைக்கும் அவசியம் எனக்கு இருப்பதாக தெரியவில்லை. கவனமாகவே அவருடன் நான் நட்பு வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஜீரோ டிகிரி குறித்தும் (சாருவின் மற்ற எழுத்துக்கள் அல்ல) ஃபேன்ஸி பனியன் குறித்தும் அவை முக்கிய இலக்கிய ஆக்கங்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் அந்த கூட்டத்தில் அப்படி ஒரு கருத்தை கூட நான் சொல்லவில்லை. ஒருவர் சாரு தன் மனைவி குறித்து ஆபாசமாக எழுதவில்லையே என்பதாக முன்வைத்து பேசியதை, எம்.எஃப். ஹுஸைனின் ஓவியத்தை முன்வைத்து இந்துத்வாவின் ஒரு தர்கத்துடன் தொடர்பு படுத்தி ஒரு வரி பேசினேன். அது யாருக்கும் அங்கே புரிந்ததாக எனக்கு தோன்றவில்லை. அந்த ஒற்றை கருத்தை சாருவுக்கு நான் வைத்த ஐஸ் என்பதாக திரிக்கும் கென்னின் அறிவு மற்றும் நேர்மையுடன் உரையாடுவது எனக்கு சாத்தியமில்லை. பொதுவான தெளிவிற்காக இந்த பின்னூட்டம்
கென்,
̀நான் எல்லாரையும் தாண்டி சாருவிற்கு ஐஸ் வைத்தேன்' என்று அப்பட்டமாக நீங்கள் புளுகியதை பற்றி பேசுவது எனக்கு முக்கியமாக பட்டது. அந்த கூட்டத்தில் நான் பேசிய கருத்தை முக்கியமானதாக நினைக்கிறேன். அது எனக்கு நினைவும் இருக்கிறது என்பதால் அதை பற்றி பதில் சொன்னேன்.
கடற்கரை கூட்டத்தில் சாரு பற்றி உங்களிடம் என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. தனிப்பட்ட முறையில் சொன்னதை என்னிடம் அனுமதி வாங்காமல், சுமார் ஒன்றரை வருடம் கழித்து, உங்கள் நினைவில் இருந்து பதிவில் எழுதுவது அநாகரிகம் என்பது கூட புரியாத உங்களிடம் நான் என்ன பேசமுடியும்! நான் சொல்லயிருக்க கூடியது அரசியல்ரீதியான கருத்து அல்ல. கிண்டலாக சொல்லியிருக்கலாம், வேறு ஏதாவது சொல்லி உங்களுக்கு வேறுவிதமாக புரிந்து இருக்கலாம். நீங்கள் சொல்லுவது போல கூடவும் சொல்லியிருக்கலாம், அப்படியிருந்தாலும் ரொம்ப அநியாயமாக ஏதோ சொல்லிவிட்டதாக எனக்கு தோன்றவில்லை. இது குறித்து பேச எதுவும் இல்லாததால் அதை தொடவில்லை
சாருவிற்கு நீங்கள் வைத்தது ஐஸ் அல்ல இந்துத்துவ ஒற்றை தர்க்க கருத்து நான் திரித்து புளுகிவிட்டேன் அய்யா அதற்காய் என்னிடம் என்னைப்பற்றி நேரடியாக நீங்கள் முன்வைத்த கருத்தை முதலில் நினைவில்லை , பிறகு தனிப்பட்ட முறையில் , அனுமதி வாங்கியிருக்க வேண்டும், ஒன்றரை ஆண்டுகள் கழித்து ( காலத்தை தெளிவாக நினைவு வைத்திருக்கிறார் ) .அரசியல் ரீதியான கருத்தில்லை, கிண்டலாக சொல்லியிருக்கலாம் இன்னும் பிற
எனக்குத்தெரிஞ்ச வரைக்கும் என்னோட அறிவுக்கு எட்டின வரைக்கும் உண்மையை சொல்ல யார்க்கிட்டேயும் அனுமதி வாங்கத்தேவையில்லை. உண்மைன்னு தெரிஞ்சா போதும் . மற்ற படி இலக்கிய சூத்திரங்கள் இன்னும் கொஞ்ச மூ த்திரங்கள்னு வாழ எனக்குத்தெரியாது.
நான் சரி / நான் மாத்திரம் சரியே சரி - நகுலன், இது கூட நகுலனை படிச்ச ஒருத்தர் எனக்கு சொன்னது.
நானும் ஒரு கேடு கெட்ட குட்டிப்பூர்ஷ்வாதான் நமக்கும் தொழில் முடிந்தவரை கலகம். கலகிய பின் எண்ணுதலும், பரிசீலித்தலும். அதற்கு பின்னும் சூழல் சாதகமாயிருந்தால் சில நல்லிணக்க முயற்சிகளை அவ்யப்போதாவது முன் வைப்பதுவும்தான்.
9 சொல்லிட்டுப்போனவங்க:
//சாருவோட எழுத்து தனி உலகம் , அது சாக்கடைன்னு துப்புற ஆளுங்கதான் வெறிப்பிடிச்சு படிக்கிறாங்க, சாருவைக்கல்லால் அடிச்சு கொல்லன்னும்னு குதிக்கிறவங்க உள்மனசுல சாருவோட எழுத்து மேல தீராத மோகம் இருக்கு. அதுதான் சாருவோட எழுத்துக்குக்கிடைச்ச வெற்றி.//
படித்ததும் எனக்கு ஹோவர்ட் ஸ்டோன் கதைதான் நினைவுக்கு வந்தது. அந்த ஆளுடைய நிகழ்ச்சியை அறவே வெறுப்பவர்கள்தான் நிறைய நேரம் கேட்பார்களாம் :-)
:) நன்றி நாகு
அடிச்சு ஆடுங்க..! :)
vanga adalam rvc :)
உனக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?
என்ன இது சின்ன புள்ளதனமா...எல்லாம் பாக்குறாங்க இல்ல...!!!
சண்ட போடபடாது...!! ஓகே??
சாரு நிவேதிதா.. நெறய கதையெல்லாம் எழுதுவாரில்ல அவருதானே!!??
பெரிய எடத்துலா தான் தொடர்பு வச்சிருக்கிங்க!!
ஆஹா சிவா பார்க்கிறதுநாளதான் சண்டையே போடுறோம்
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க எனக்கு கமெண்ட் எல்லாம் போடுறீங்களே :)
நீர் இவ்வளவு பெரிய காமெடிப்பீசா? ஆகா தெரியாமப் போச்சே!!
Post a Comment