தங்க நிற மீன்களை கண்ணாடிக்குளத்தில்
சுமந்தலைகிறாள் சஹானா
அலையடிக்காத அதன் கரைகளில்
மோதி உடைகின்றன நீர்க்குமிழிகள்
உள்ளுக்குள் வேர்விட்ட மரம்
கிளைவெடித்து குளம் நிறைக்கிறது
சுற்றும் சக்கரத்தின் முனைகளில்
பெருக்கெடுக்கின்றன
நதியோடு எதிர்முனைப்பில் நீந்தியக்காலங்கள்
கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்
வீசியெறியும் உணவின் ஈர்ப்பில்
கரையுடைக்கின்றன
கரங்களை உயர்த்தி ரட்சிப்பின்
மீட்சியை அவற்றுக்கும் தருகிறாள் சஹானா
Labels: கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
உங்களின் இந்த சஹானா தொடர் கவிதை மற்றவை போலவே அபாரம் ... எனக்கு மிகப் பிடித்திருக்கிறது
Nundhaa said...
September 26, 2009 3:15 PM
ரொம்ப நல்லா இருக்கு கென்.
பா.ராஜாராம் said...
September 26, 2009 5:56 PM
andha sonnathu poola shahana thodar enakku mikavum pitiththirukkirathu
மண்குதிரை said...
September 26, 2009 6:22 PM
////கடலாகிறது குடுவை நதியாடுகின்றன மீன்கள்
//
ரொம்ப நேரமா இந்த வரிகள் ஓடிகிட்டே இருக்கு பாஸ் உள்ளுக்குள்ள.
நர்சிம் said...
September 30, 2009 5:29 PM
//ரட்சிப்பின்
மீட்சியை //
அழகிய சொல்லாடல்... வாழ்த்துகள்
rajan RADHAMANALAN said...
October 14, 2009 3:56 PM