கடந்த ஆண்டின் புத்தக கண்காட்சியில் சாருவை அரங்கில் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய நண்பரோ போயி பேசுடா, அவர்க்கிட்ட ஆட்டோகிராப் வாங்கிக்கோடா என்று சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ வெகு தயக்கம் ,
என்ன சொல்லி பேச ஆரம்பிப்பது , அவரின் எழுத்தைப்பற்றி பேச படித்தது எல்லாம் மறந்து போயிருந்தது.
அதற்குப்பின்னால் நண்பர் பாண்டித்துரையின் மூலம் அவரை தொடர்புக்கொண்ட பின்னே எனக்குத்தெரிந்தது அவரின் குழந்தைத்தனம். சாருவின் எழுத்தை மட்டும் படித்து விட்டு அவரைப்பற்றி தவறாய் யோசிப்பவர்களுக்கு எதையும் சொல்லி புரிய வைக்க முடியாது. சாருவிடம் அவரிடம் பிடிக்காததை நாமே நேரடியாக பேச முடியும் அதை எந்த தலைக்கனமும் இன்றி அவரே விளக்கமோ மறுப்போ அளிப்பார்.
வாசிக்க வேண்டிய புத்தகங்கள், ஆசிரியர்கள் என அவரின் அறிவுரைகள் புதிதாய் எழுதுபவர்களுக்கு வெகு உபயோகமானதாயிருக்கும். சாருவின் எழுத்தின் உண்மை பலரின் ஆழ் மன வக்கிரங்களை துளைத்திடுவதாலே அவரை பிடித்தாலும் பிடிக்காதென்கிற போக்கை நிறைய பேர் பெருமையடித்துக்கொண்டிருக்கிறார்கள். சாருவின் தற்போதைய கடவுள் நம்பிக்கைகள் எனக்குப்பிடிக்கவில்லை அதை அவரிடம் நேரடியாக விவாதிக்கக்கூடிய சுதந்திரத்தை எனக்கு தந்திருப்பதிலிருந்து சாருவை என் குரு என்பதில் எனக்கு மிக சந்தோசமே.
இந்த புத்தகக்கண்காட்சிக்கு சாருவின் பத்து புத்தகங்கள் வெளிவருகிறது. சாருவை வாசிக்கிறவர்கள்,எதிர்ப்பவர்கள்,இதுவரை தெரிந்திடாதவர்கள் என எல்லோரும் செல்லுங்கள். உங்கள் நண்பர்களையும் அழைத்துச்செல்லுங்கள். சாருவுடன் பேசுங்கள், நீங்களே உணர்வீர்கள்.
சாரு நிவேதிதாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா
சாருவின் பத்து நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. விருப்பமானவர்கள் மனத்தயக்கம் ஏதுமின்றி செல்லலாம். இலக்கியம்,சினிமா, இசை , நாடகம் என 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனிச்சிறப்புடன் இயங்கி வரும் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவை சிறப்பியுங்கள்.
உயிர்மை நூல் வெளியீட்டு அரங்கு 1
சாருநிவேதிதாவின் பத்து நூல்கள்
நாள் 12.12.09 சனிக்கிழமை
நேரம். மாலை 5.30 மணி
இடம்: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (Film Chamber)
604/605/606 டி.ஆர்.சுந்தரம் அவென்யூ
ராணி சீதை மன்றம் அருகில்
அண்ணாசாலை
சென்னை-600 006
வரவேற்புரை
மனுஷ்ய புத்திரன்
1. வாழ்வது எப்படி ?
( கட்டுரைகள் )
சிறப்புரை: சா.கந்தசாமி
2. மலாவி என்றொரு தேசம்
( கடிதங்கள் )
சிறப்புரை: எஸ்.ராமகிருஷ்ணன்
3. அருகில் வராதே
( கேள்வி - பதில் )
சிறப்புரை: மிஷ்கின்
4. கெட்ட வார்த்தை
( கட்டுரைகள் )
சிறப்புரை: மதன் பாப்
5. அதிகாரம் அமைதி சுதந்திரம்
( அரசியல் கட்டுரைகள் )
சிறப்புரை: பாரதி கிருஷ்ணகுமார்
6. நரகத்திலிருந்து ஒரு குரல்
( சினிமா கட்டுரைகள் )
சிறப்புரை: .வசந்த பாலன் -
7. தாந்தேயின் சிறுத்தை
( விவாதங்கள் - விமர்சங்கள் )
சிறப்புரை: அழகிய பெரியவன்
8. கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்
( இலக்கிய கட்டுரைகள் )
சிறப்புரை: ஷாஜி
9. ரெண்டாம் ஆட்டம்
( நாடக சர்ச்சைகள் )
சிறப்புரை: ப்ரீத்தம் சக்கரவர்த்தி
10. ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
( நேர் காணல்கள் )
சிறப்புரை: பவா.செல்லதுரை
ஏற்புரை:
சாருநிவேதிதா
அன்போடு அழைக்கிறோம் ..,
மேலும் விபரங்களுக்கு
Labels: அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
charu unga sithapavaa ?
Anonymous said...
December 02, 2009 2:14 PM
அட பாவிகளா இதுக்கே சாருவே பெரிய பதிலா சொல்லிட்டாரு போங்கயா போயி புள்ளக்குட்டிங்கள படிக்க வையுங்க :)
கென்., said...
December 02, 2009 6:38 PM