சும்மா இருத்தல் என்கிற ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதையை முன்வைத்து நண்பர் நோ (no) எழுதியிருக்கும் பின்னூட்டத்தின் பிரதிபலன் மொக்கை இது.
சும்மா இருத்தல்
சும்மா இருக்காதே
ஏதாவது செய்துகொண்டே இரு என்றான் மாரி
idle mind is devil's paradise -
ஆங்கில மேற்கோள் காட்டினான்
ஏதாவது செய் ஏதாவது செய்
என்ற ஆத்மாநாமின் கவிதையைச் சொன்னான்
சும்மா இருப்பதற்கும் ஏதாவது செய்வதற்குமான
இடைவெளிக் குழப்பத்தில்
செய்திருக்கிறேன் இந்த ஒன்பது வரிகளை
நோ:
Mediocrity can be easily spotted especially when it manifests as poetry!! And as a corollory, medicores can also be spotted, even if they do not come out with such original lines!
முதல் வரி உங்களுக்கு, இரண்டாவது அண்ணன் திரு கென்னுக்கு!
கென் : என்னை அண்ணன் மற்றும் திரு என்கிற மரியாதை அடைமொழிகளோடு அழைத்தமைக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேங்க அழுகாச்சியா வருது
கிராமத்தான்: ஆட்டுக்கு மாலை அன்னைக்கே வெட்டத்தான் கிறுக்குப்பயலே கீழே படிடா
திரு கென் அண்ணனின் அறிமுகத்தைப்பார்த்தேன். அவருக்கு பிடித்தது ஒரு மண்ணும் இல்லையாம் மேலும் அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் அவர் ஒரு குழப்படிக்காரனாம்! உங்களுக்கு ஏத்த ரசிகர், No doubts!
அவரும் உங்களைப்போன்ற கவிதை எழுதும் ஆருவம் கொண்டவர் போல இருக்கிறது! சும்மா பக்கம் பக்கமாக போட்டு தள்ளியிருக்கிறார், தாங்க முடியவில்லை! ஆனால் இந்த மொக்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டுமே? so, உங்களுக்கு ஒரு ரெண்டு சூப்பர் சார் போட்டால், நீங்களும் போய் ஒரு ரெண்டு சூப்பர் போடுவீர்கள் என்ற ஆசைதான், வேறென்ன சொல்லுவது!
பரமார்த்தகுருவும் சிஷ்யர்களும் குழப்பினார்கள் அன்று, ஜ்ய்வ்ரோமும் சில பல ஜால்ராக்களும் ஜிங் சக் அடித்தார்கள் இன்று!
வாழ்க கவிதைகள்!
கென் : எனக்கு எதுவும் பிடிக்காததனாலோ நான் ஒரு குழப்படிக்காரனா இருக்கிறாதாலோ நோ சார் உங்களுக்கு என்ன பிரச்சனை? அப்பாலிக்கா நான் எப்போ கவிதைன்னு சொன்னேன் , மொக்கை இல்லன்னும் சொல்லலை, நான் ஜால்ரா அடிக்கலேன்னும் சொல்லலையே.
பரமார்த்தக்குருவா இருக்கிறதாலையோ அவரோட சீடர்களா பலர் இருக்கிறதாலையோ தங்களுக்கு ஆவது என்ன நோ நோ நோ
கிராமத்தான் : மசுருள்ள மகராசன் முடிஞ்சிக்கிறான் உனக்கேன் நொட்டிக்கிட்டுப்போகுது
And by the way, it should be work shop and not paradise as the Devil's paradise is Hell and its there the sinners are subjected to torture. The point is that its called hell and Lucifer is its custodian whereas here its called மொழி விளையாட்டு and you know who its custodian is!
கென் : எனக்கு இம்மாம் இங்கீலீசு தெரியாதுங்க நோ நோ
கிராமத்தான் : custodianன்னா கஷ்டப்படுறவனா இருக்குமோ
அன்பான நண்பர் திரு ஜோவ்ரம் சுந்தர் ,
இதற்க்கு பெயர் கவிதை என்று நீங்கள் சொல்லியதாக நான் படிக்கவில்லை! சாமரம் வீசவந்தவர் சிலர் சொன்னார்கள், அவ்வளவே! புரிகிறது, பிணம் என்று நான் ஏன் சொல்லவேண்டும், நல்ல மணம் என்று சொல்லுவோர் இருக்கையில் என்ற எண்ணம்தானே? ஒருவரின் பிளாகை வைத்தே, கொஞ்சம் கூர்ந்து கவனித்தே அவர் யார் என்பதை சொல்லிவிடலாம்! நீங்களும் விதிவிலக்கல்ல!
உள்மனதின் உதித்தல்கள் மட்டும் நான் வித்தியாசமானவன், நான் விடயம் தெரிந்தவன் என்று சொல்லுகையில், வெளி உலகம் அதை ஏற்காது, எள்ளளவும் அதை மதிக்காது நான் ஒன்றுமிலாதான் என்று புரியவைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இந்த பிளாக் என்ற தன் தணிக்கைக்கூட தேவைஇலா செலவில்லாசொல்லி
மட்டும் நானும் நாலும் தெரிந்தவன், மானுடரே அறிந்து கொள்ளுங்கள் என்று அடித்து பேச உதவுகிறதே!! எழுதாமல் விட்டுவிடுவோமா என்ன?
அப்படி இல்லாவிடில் திரு கென் போன்றவர்களும் இங்கு வந்து, இந்த மொக்கையை தல சூப்பர் என்று எப்படி சாமரம் வீசுவது நடக்குமா
கென் : ஒருத்தரோட பிளாக்கைப்பார்த்தே வருங்காலம் நிகழ்காலம் கடந்தகாலம் சொல்ற வொயிட் அண்ட் வொயிட் பார்ட்டீயா நீங்க அடப்பாவிகளா இம்புட்டு நாளா தெரியாம போச்சே, சாமரம் வீசுறது சமரசம் பண்ணிக்கிறது பொய் சொல்றது இதெல்லாம் நான் பொறந்த நாள்ள இருந்தே பண்ணிக்கிட்டுத்தானே இருக்கேன். இப்போ மட்டும் என்ன புதுசா :)
நோ:
“உள்மனதின் உதித்தல்கள் மட்டும் நான் வித்தியாசமானவன், நான் விடயம் தெரிந்தவன் என்று சொல்லுகையில், வெளி உலகம் அதை ஏற்காது, எள்ளளவும் அதை மதிக்காது நான் ஒன்றுமிலாதான் என்று புரியவைத்துக்கொண்டிருக்கும் பொழுது, இந்த பிளாக் என்ற தன் தணிக்கைக்கூட தேவைஇலா செலவில்லாசொல்லி
மட்டும் நானும் நாலும் தெரிந்தவன், மானுடரே அறிந்து கொள்ளுங்கள் என்று அடித்து பேச உதவுகிறதே!! எழுதாமல் விட்டுவிடுவோமா என்ன? ”
இங்க என்ன நீரும் அப்ரூவரா மாறிப்புட்டீரோ நல்லாத்தானய்யா போய்க்கிட்டிருக்கு
கிராமத்தான் : புள்ள பெக்கனும்னா கல்யாணம் பண்ணிக்கோங்க அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட பெத்துக்கலாம்னு பாக்காதீங்க
அழகியல் எதிர் அழகியல்ன்னு எல்லாம் என்னன்னொமோ சொல்றாங்க எது கவிதைன்னு ஒட்டுமொத்தமா தீர்மானிக்க முடியுமா என்ன ? வாசிக்கிறவனோட வாசிப்பனுபவம், பின்புலம்னு நிறைய விசயங்கள் இருக்கு. கவிதைக்கான் எதிர் அழகியலை கட்டமைக்கையில் கவிதைக்கான மொழி என்கிற ஒன்று அதாவது இதுவரையில் சொல்லப்பட்ட அழகுணர்ச்சியான வார்த்தைகள் செத்துப்போகும் , பேச்சுமொழி , கவிதைக்கு உகந்ததாக கருதப்படாத வார்த்தைகள் உள்வரும். இது எழுதுகிறவனின் மனநிலை ஒட்டிய விசயம். அவன் பரமார்த்த குருவெனில் அதை ஒட்டிய வார்த்தை அடுக்குகளை வெளிப்படுத்துவான். அறிவு ஜீவி எனில் அவனுக்கான மொழிபுலத்தை பின்பற்றுவான். நேர்மையான விமர்சனம் என்பது தத்துவார்த்த ரீதியான முறையில் இருக்க வேண்டும் , உனக்கெல்லாம் எதுவுமே தெரியாது நீ சொம்படிக்கிறே, நான் புத்திசாலின்னா வேறென்ன சொல்ல ஓ நோ.
அழகியலுக்கு எதிராய் உருவமெடுத்த பிரான்சின் டாடாயிஸ்ட்களைபோல சுந்தரும் அவருக்கான மொழியைப்பின்பற்றுகிறார் அவரின் வாசிப்பு அனுபவத்திறனைப்பொறுத்து இத்தகைய கவிதைகள் அல்லது மொக்கைகள் மிளிர்வது என்ன தவறு?
சுந்தர் பரமார்த்த சீடனாக இருப்பதிலோ ஜால்ராவாக இருப்பதிலோ எனக்கொன்றும் வெட்கமில்லை. குற்றமில்லாதவர் கல்லெறியட்டும்னு சொல்றதுதான் சிறந்தது.
இலவச இணையம் கட்டற்ற சுதந்திரம் , கிடைச்ச கேப்ல வண்டியை ஓட்டுவோம் எனக்கு நீ சொறிஞ்சா உனக்கு நான் சொறிவேன் இதுல புரட்சி புண்ணாக்கு இலக்கியம் சமூகம்னு நான் என்னைக்குப்பேசினேன்.
நான் ஒரு முதல் தர பூர்ஷ்வா, எனக்கு என் நலம்தான் முக்கியம் திரு உயர்திரு நோ உங்களுக்கு ஒரு வலைப்பதிவைப்பார்த்தாலே அவர் யார் அவரின் பின்புலம் முன்புறம் எல்லாம் தெரியுமென்றால் , தங்களைப்பற்றி எந்த ஒரு தகவலயையுமே தெரிவிக்காமல் வெகு புத்திசாலித்தனமாக வினவையும் முற்போக்காளர்களையும் வம்புக்கிழுக்கும் தாங்கள் யாரோ ஓ நோ
எனக்கும் எழுத எதுவுமே கிடைக்காம எத்தனை நாளைக்குதான் காதல்தோல்வியையும் , கவிஜ மொக்கையையும் எழுதறதுன்னு எண்ணி எண்ணி நொந்த ஒரு வெள்ளிக்கிழமையில் என் கண்ணில் பட்ட உங்க பின்னூட்டத்திற்கு நன்றிங்க ஓ நோ.
எதிர் கலாச்சாரம் பற்றி என் குரு சாருவின் வரிகள்
இதுவும் ஒரு சாமரம்தான்
கலாச்சாரம் பற்றி தமிழில் நிறையவே எழுதியிருக்கிறார்கள். தமிழ்க் கலாச்சாரம் , திராவிடக் கலாச்சாரம் என்றெல்லாம் கதைக்கப்பட்டிருக்கின்றன. சிந்தனையாளர்கள் என்பதாய் எழுதுபவர்களால் வெகுஜன கலாச்சாரம் , கும்பல் கலாச்சாரம் , வணிகக் கலாச்சாரம் , சிறுபான்மை கலாச்சாரம் , உன்னதக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லப்பட்டன.
எம்.ஜி.ஆர். , சிவாஜி , தமிழ் சினிமா , குமுதம் எல்லாம் அசிங்கம். சிறு பத்திரிகையில் வரும் கதை , கவிதை எல்லாம் உன்னதம். இப்படி ஒரு சித்தரிப்பு மிகப் பரவலாய் வளர்ந்தது.
நிறுவனங்கள் , அமைப்புகள் , வாழ்வியல் மாதிரிகள் , விதிமுறைகள் மீதான கடும் அதிருப்தியில் அலையலையான கலகங்களால் உருவானது மேற்குலகின் சிந்தனை.
மேற்கின் சிந்தனைகளுக்கு சனாதன பெயிண்ட் அடித்து , தமிழ்க் கலாச்சார பெருங்காய டப்பாவில் போட்டு , தமிழ்ப் புனிதத்தைத் தொடர்ந்து காத்து வந்தனர் தமிழ் அறிவுஜீவிகள்.
அப்படியும் தடுக்க முடியாமல் உள்ளே நுழைந்து விட்டது எதிர்-கலாச்சாரம்.
கலை , இலக்கிய உன்னதம் , அழகு , ரசனை எல்லாம் கேள்விக்குள்ளாயின. கேலி செய்யப்பட்டன. தமிழின் விலக்கல்கள் ( exclusions) அச்சேறின. சில பிரதிகள் உருவாயின.
யார் இந்த ரௌடிப் பயல்கள் என்றார்கள் தமிழர்கள்.
இவர்கள் விடலைகள் , அரை வேக்காடுகள் , இலக்கியத் திருடர்கள் , முரடர்கள் , முட்டாள்கள், அரை ட்ரௌசர் பயல்கள் என்றார்கள் சிந்தனையாளர்கள்.
“ ஆபாசம் , அசிங்கம் ” என்று ஒரே கூச்சல்.
இதையெல்லாம் செய்வது யார் ? சாருநிவேதிதாவா ?
உதைக்கணும் அவனை....
தமிழ்ப் புனிதத்தைக் காக்க தயாராகிவிட்டது தமிழ் ஃபாசிசம். மத்தியதர வாழ்க்கையை மண்ணின் வாழ்க்கை என ஸ்தாபிக்க முயலும் அராஜகவாதிகள் மக்கள் வாழ்வையும், கடந்த காலத்தில் பதிவு பெற்ற விலக்கல்களையும் பாராத குருடர்கள் போல நடந்து கொள்கின்றனர். சிலர் அவற்றையே காட்டி “ ஏற்கனவே இருப்பதுதான் ” என முட்டாள்தனமாக கொக்கரிக்கின்றனர்.
சமகாலப் பதிவுகள் யாரால் , எதற்காக , எப்படி செய்யப்படுகின்றன ? கலையில் , எழுத்தில் செயல்படும் அரசியல் என்ன ?
கேள்வி கேட்டால் உதைக்கத் தயராகிவிட்டார்கள் தமிழ் அறிவுஜீவிகள்.
கவிதைப்பற்றி திரு.பாம்பாட்டி சித்தன் வார்த்தைகளில்
நன்றி பாம்பாட்டி சித்தன்
விவரிப்பை விடுத்து உணர்த்துவதை முதன்மைபடுத்துவதால் இன்றைய கவிதை கச்சிதமான அமைப்புக் கொண்டதாகிறது. இதனால் கவிதை பன்முகத்தன்மை கொண்டதாகவும் ஆகிறது. அதே சமயம், பன்முகத்தன்மை கொண்டதுதான் நல்ல கவிதை என்றும் ஆகிவிடாது. அவ்வாறு அல்லாமல் நேரடியான வெளிப்பாடாகவும் இன்றைய கவிதைகள் அமைகின்றன.
கவிதைக்கு பல முகங்கள், பல குரல்கள் உண்டு. இது கவிஞனின் வாழ்க்கை பின்னணி, அவனது ஆளுமை சார்ந்தது. எனினும் அந்த குரல் ஜீவன் மிகுந்ததாக வெளிப்படவேண்டும். உண்மையின் குரலாக இருக்கவேண்டும். பாவனையும், பொய்மையும் கொண்ட குரல் எத்தனை தான் கவர்ச்சிகரமானதாயினும் ஒருபோதும் கவிதையாவதில்லை. கவிதை என்றும் புதியதாகத் தோன்றவேண்டும். கவிஞனின் சுயமான பார்வை, அவனுக்கேயான மொழி சார்ந்து கவிதையில் இந்த புதுமை சாத்தியமாகிறது.
ஆக உங்களின் அறிவுத்திறனையும் இத்தகைய வழிகளில் பதிவிடுங்கள் கவிதைன்னா என்னன்னு தெரியாத என் போன்ற தற்குறிகள் தெரிந்துக்கொண்டு இலக்கியம் படைப்போம் என்பதை உங்கள் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன். மற்றபடி தாங்கள் தயைக்கூர்ந்து எனக்காய் நாளொன்றை ஒதுக்கீடு செய்தால் சென்னை சென்ரல் ஸ்டேசன் பக்கத்தில் இருக்கும் பிக்னிக் பாருக்கு செல்லலாம் என்பதை ஜ்யோவ்ராம் சுந்தரின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன், இதற்கு மட்டும் யெஸ் சொல்வீர்களாக நோ
11 சொல்லிட்டுப்போனவங்க:
:)
:):):) no no
http://aadhirah.blogspot.com/2009/02/blog-post_6423.html
http://ilangokrishnanthewriter.blogspot.com/2009/09/blog-post.html
எது கவிதை
நன்றி மொக்கைச்சாமி உபயோகமான இணைப்புகள் தந்தமைக்கு
nala soringa samikalaa
உனக்கும் அந்த நோவுக்கும் என்ன கருமம் வேனுன்னாலும் இருந்துட்டு போகட்டும், அதுக்காக ஏன் இப்படி வாந்தி வார மாதிரி தலைப்பு வைக்கிற க்ழி்சடை, பரதேசி, அடுத்த பிறவியிலாவது மனுசனாப் பொறடா பண்ணாடை.
நன்றிடா சொறியாத சுயமைதுனம் செய்யாத மனுச அனாமி உண்மையான பேர்ல வந்து பேச முடியாத உனக்கெல்லாம் என்னடா மனுசத்தனம் பத்தி பேசுற தகுதி இருக்கு
மும்பையில என்ன பண்ணிட்டு இருக்கேடா அனானி டேஸ் :)
ஏம்பா அந்த அவன்னா நீயி !!
முன்னாடியே சாரு ரசிகன்னு ஒரு ஹிண்டு கொடுத்திருந்தாய்ன்னா, இந்த ஏரியா பாக்கமே வந்திருக்க மாட்டனே @#$%. அந்த அண்ணனுட படத்தை திருஷ்டி படம் வைக்கிராக்கில மொதப் பக்கத்தில போட்டுவை தம்பி . எங்க நேரம் விரயமாக்காது இருக்குமில்லை !!! என்ன நான் சொல்றது .
unnaya nanada kupiten neeya vanthu kuninjaa nan enna pana mudiyum unmayana per kata mudiyatha neeyellam ennatha vimarsanam panni pudunga porea poie rajapaksheykku election velaya paru
Post a Comment