Thursday, December 10

உயிர்க்கொலை

பாடையின் மூங்கில்களில் கட்டப்பட்டிருக்கும் குரல்
போகும் வழியெங்கும்
பிணத்தின் காதுகளில் எதிரொலித்திருக்கும்.
தோண்டப்பட்ட புதுக்குழியினுள்ளே
நேற்றையவர்களின் எலும்புகள் மண்டையோடுகள்
பீச்சியடித்த சாராயத்தின் ருசியில்
வெட்டப்பட்ட குழியின் அளவைபடுத்தே
அளப்பவனுக்கும் அதன் குரல் எதிரொலிக்கும்
மூன்றாம் சுற்றில் உடைந்த பானை
ஈரமாக்கும் தானிய விதைகளை
கடைசியாய் பார்த்தபோது அவன் புன்முறுவல் செய்திருக்கலாம்

நாளைய பிணக்குழியில் கண்டடைவீர்கள்
சிரித்த முக மண்டையோட்டை
செரித்துப்போன கோழியின் மிச்ச எலும்புகளை

8 சொல்லிட்டுப்போனவங்க:

யாத்ரா said...

ரொம்ப நல்லா இருக்கு கென்.

கென்., said...

நன்றி யாத்ரா :)

rajan RADHAMANALAN said...

வாழ்த்துகள் கென்....

மீண்டும் மீண்டும் வாசித்தேன்

இளவட்டம் said...

அருமையாய் இருக்கு கென்!

கென்., said...

நன்றி ராஜன் & இளவட்டம் :)

ரௌத்ரன் said...

ரொம்ப நல்லாயிருக்கு கென் :)

கமலேஷ் said...

திரும்ப திரும்ப வாசிக்க சொல்லும் கவிதை...
அழகு...வாழ்த்துக்கள்...

கென்., said...

நன்றி கமலேஷ்

Post a Comment